விபத்தில் சிக்கிய தமிழருக்கு சிகிச்சை தர மறுத்தது தவறு: கொல்லம் கமிஷனர் அஜிதா பேகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்லம்: கேரளாவில் விபத்தில் சிக்கிய தமிழக இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொல்லம் கமிஷனர் அஜிதா பேகம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் இளைஞர் முருகன். இவர் நேற்று இரவு 11 மணியளவில் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் கொல்லத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

Denied treatment to the road accident victim in kerala for 7 hours and the victim has died

கொல்லத்தில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனையில் முருகனுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மறுத்துள்ளனர். முருகனுடன் யாரும் இல்லை என காரணம் கூறி மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் சிக்கி அபாய கட்டத்தில் இருக்கும் ஒருவருக்கு மருத்துவர்கள், மனிதாபிமான முறையில் நடந்து கொண்டது தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் நடந்துகொண்ட அலட்சியம் தமிழரின் உயிரை பறித்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு கொல்லம் போலீஸ் விசாரணை செய்துவருகிறது. இது தொடர்பாக கொல்லம் போலீஸ் கமிஷனர் அஜிதா பேகம் கூறுகையில், " எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Salem Kollam Kuttai lake illegal buildings clear - Oneindia Tamil

திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், கோட்டயத்தில் உள்ள கிம்ஸ் (KIMS) மருத்துவமனையிலும், கொல்லத்தில் உள்ள மெடிசிட்டி மற்றும் மெடி டிரினா மருத்துவமனையிலும் சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தவறான முன்னுதாரணம். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகங்களிடம் விசாரணை நடத்தப்படும். " என்று தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Road accident victim dies in Kollam, Doctors Denied treatment for 7 hours.
Please Wait while comments are loading...