For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதியில் பக்தர்களுக்கு இலவச உணவு... ஏழுமலையானுக்கு 1,000 ரூபாய் காணிக்கை செலுத்த தடை இல்லை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் பக்தர்கள் தவித்து வருவதால் தேவஸ்தானம் சார்பில் இலவச உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்பதி: ஏழுமலையானுக்கு காணிக்கையாக 500, 1000 ரூபாய் நோட்டுக்களை காணிக்கை செலுத்த தடையில்லை என்று திருமலை, திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். செவ்வாய்கிழமையன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் திருமலையில் உள்ள பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள் வாங்க முடியாதலும், உணவகங்களில் சாப்பிட, பிரசாதம் எதுவும் வாங்க முடியாமலும் தவித்து வந்தனர்.

Devotees to Tirupathi get free food, water after 500, 1000 rupee notes banned

திருமலையில் உள்ள ஆந்திரா வங்கியில் பணம், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் வாங்கி தருவர். மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தது. இதனால், சுற்றுலா துறை மூலம், திருமலை வந்த பக்தர்கள், டிக்கெட் வாங்க சென்றபோது, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படவில்லை. இதனால், பல மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் டிக்கெட் பெற முடியாமல் தவித்தனர்.

இதனையடுத்து தேவஸ்தானம் சார்பில் அந்த ரூபாய் நோட்டுகளை பெற்று, தரிசன டிக்கெட் வழங்கியது. பக்தர்களுக்கு இலவச உணவும், குடிநீரும் வழங்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. அதன்படி அன்னாதானம் வழங்குவதோடு, ஆங்காங்கே பல இடங்களில் பால், குடிநீர் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ், மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளது. என்றாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களிடம் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை காணிக்கையாக உண்டியல்களில் செலுத்தலாம். அதற்கு எந்த விதமான தடையும் இல்லை.

உண்டியல் காணிக்கைகளை எண்ணி நாங்கள் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து வருகிறோம். உண்டியல் காணிக்கையை எண்ணி கோவிலில் இருப்பு வைப்பதில்லை. காணிக்கையை நாங்கள் ரிசர்வ் வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்வோம்.

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு உள்ளதால் ஏழுமலையான் கோவிலுக்கு உண்டியல் வருமானம் அதிகரிக்கும் என்றும்

மத்திய அரசு விதித்துள்ள காலக்கெடுவுக்கு மேல் மாற்ற முடியாத பணத்தை ஏழுமலையான் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
As people across the country prayed to God wondering how they would survive without being able to transact with 500 or 1000 rupee notes, it is only fitting that those on their way to the Lord Tirupati shrine found respite.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X