For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகளுடன் சேர்த்து வைத்த உங்களுக்கு நன்றி: மாற்றுத்திறனாளி டாக்டர் 'அம்மா' கண்ணீர்

By Siva
Google Oneindia Tamil News

புனே: Change.org மூலம் ஆன்லைன் விண்ணப்பம் போட்ட மாற்றுத் திறனாளி பெண் டாக்டர் அவரது 11 வயது மகளோடு சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்.

Change.org என்ற இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் ஏதாவது கோரிக்கை விடுத்து மக்களை கையெழுத்திடுமாறு கூறி விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண் டாக்டர் அலக்நந்தா வைத்யா Change.orgல் விண்ணப்பம் ஒன்றை போட்டார்.

சக்கர நாற்காலியில் இருக்கும் அவருக்கு அனன்யா என்ற 11 வயது மகள் உள்ளார்.

சிங்கிள் தாய்

சிங்கிள் தாய்

தனியாக இருந்து மகளை வளர்க்க வைத்யா அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவரை புனேவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றிவிட்டார்கள்.

தனியாக

தனியாக

மகளை பிரிந்து வைத்யா தனியாக இருக்க, தாயை பிரிந்து அனன்யா புனேவில் தவித்தார். இந்நிலையில் வைத்யா Change.org மூலம் தன்னை மீண்டும் புனேவுக்கே மாற்றி மகளுடன் சேர்த்து வைக்குமாறு மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸுக்கு கோரிக்கை விடுத்தார்.

கையெழுத்து

கையெழுத்து

வைத்யாவின் கோரிக்கை கடிதத்தில் 90 ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர். இந்நிலையில் இந்த கோரிக்கை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் பார்வைக்கு சென்று அவர் வைத்யாவுக்கு புனேவுக்கு டிரான்ஸ்பர் கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

நன்றி

தனது கோரிக்கை கடிதத்தில் கையெழுத்திட்ட அனைவருக்கும் வைத்யா தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். எனக்கு டிரான்ஸ்பர் கிடைத்துள்ளதை கேள்விப்பட்டதும் என் மகள் போன் செய்து ஆனந்தக் கண்ணீர்விட்டார் என்றார் வைத்யா.

English summary
A 90% disabled single mother has got united with her 11-year old daughter after her petition via Change.org caught the attention of Maharashtra CM Fadnavis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X