For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிவி சேனல்காரங்கன்னா அப்படித்தான்.. கண்டுக்கமாட்டோம்: வசுந்தரா ராஜே அசால்ட் பேச்சு

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: தொலைக்காட்சி சேனல்களும், காங்கிரஸ்காரர்களும் சொல்வதை யாரும் சட்டை செய்ய தேவையில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தெரிவித்தார்.

கேன்சர் சிகிச்சைக்காக, போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த ஆஸ்பத்திரி ஒன்றுடன், ராஜஸ்தான் மாநில அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வசுந்தரா கூறியது: டிவி சேனல்கள், காங்கிரசார் சொல்வதை நாங்கள் கண்டுகொள்ளப்போவதில்லை. இந்த விமர்சனங்கள் மக்கள் பணியில் குறுக்கிட அனுமதிக்கமாட்டோம்.

Don't care what TV or Comg has to say: Vasundhra

போர்ச்சுக்கல் ஆஸ்பத்திரியுடனான ஒப்பந்தத்தால், ராஜஸ்தான் மக்ள்தான் பயனடைவார்கள். வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து டாக்டர்கள் பயிற்சி எடுக்க முடியும். கடந்த 20 மாதங்களில் ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்கலை கொண்டு வந்துள்ளோம். 2018ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஐபிஎல் மோசடிபேர்வழி லலித் மோடி வெளிநாடு செல்ல வசுந்தரா உதவியதாக ஆங்கில செய்தி சேனல்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், இந்த விவகாரத்தில் முதல்முறையாக பதிலடி கொடுக்க வாய் திறந்துள்ளார் வசுந்தரராஜே சிந்தியா.

English summary
Breaking her silence over row surrounding Rajasthan government's sighing of MoU with a Portugal-based hospital, Chief Minister Vasudhara Raje today said the step was taken with public welfare in mind. "What TV or Congress is saying do not affect the public's welfare".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X