For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி.யில் ரயில் தடம் புரண்டு விபத்து-15 பயணிகள் காயம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேசத்தில் ரயில் தடம்புரண்டதில் 15 பயணிகள் காயமடைந்தனர்.

ஹவுராவில் இருந்து டேராடூன் சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் 2.40 மணியளவில் உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் பகுதியில் திடீரென தடம் புரண்டது. இதில் 6 படுக்கைவசதி பெட்டி, 2 பொதுப்பெட்டி என மொத்தம் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின.

இந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்தனர். அதிருஷ்டசவசமாக யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லை. தகவல் அறிந்ததும் லக்னோ மண்டல ரயி்லவே மேலாளர் தலைமையிலான உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதனால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த 31ம்தேதி இதே ரயில் உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் அருகே தடம் புரண்டதில் 10 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In a tragic train accident in Uttar Pradesh, 8 coaches of Doon Express got derailed near Ambedkar Nagar, injuring 15 people. It is said that the count may rise. The eight coaches of the train included 6 sleeper coaches and 2 general bogies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X