For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசி, ஓ.பி.எஸ் அணிகளுக்கு தலா ஒன்றரை மணி நேரம்தான் டைம்.. சின்னம் பற்றி மட்டுமே வாதிட உத்தரவு!

இரட்டை இலை சின்னம் பற்றி மட்டுமே வாதங்களை முன்வைக்க இரண்டு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் அறிவுரை கூறியுள்ளார். தேவையற்ற நேர விரயத்தை தவிர்க்க தேர்தல் ஆணையர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்ற வாத-விவாதங்களுக்கு இரு அணிகளுக்கும் தலா ஒன்றரை மணிநேரம்தான் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் வாதத்தை முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய, இரு அணியினரும் தங்கள் தரப்பு ஆவணங்கள் மற்றும் கருத்தை நேரில் இன்று தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இருதரப்பினரும் இன்று காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள்.

Double leaf: Election commission allots One and half hours for each group

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் மைத்ரேயன் எம்பியுடன் ஹரீஸ் சால்வே, பாலாஜி, ராகேஷ் சர்மா, பரணீதரன், மனோஜ் பாண்டியன் ஆகிய மூத்த வக்கீல்கள் பங்கேற்று தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க உள்ளனர். சசிகலா அணி தரப்பில் சல்மான் குர்ஷித், மோகன் பராசரன், வீரப்பமொய்லி ஆகியோர் பங்கேற்று வாதம் முன்வைத்துக்கொண்டுள்ளனர்.

இரு அணிகளுக்குமே தலா ஒன்றரை மணி நேரம்தான் வாதிட அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் ஓ.பி.எஸ் தரப்பினர் வாதம் செய்தார்கள். மதியம் 2 மணிக்குள் விவாதத்தை முடித்துவிட்டு, மாலையில் தீர்ப்பு கூற தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரட்டை இலை சின்னம் பற்றி மட்டுமே வாதங்களை முன்வைக்க இரண்டு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் அறிவுரை கூறியுள்ளார். தேவையற்ற நேர விரயத்தை தவிர்க்க தேர்தல் ஆணையர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

English summary
Election commission allots One and half hours for each group of AIADMK, says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X