அதிகாலையிலேயே ஷாக்.. இமாச்சல பிரதேசத்தை அதிரவைத்த நிலநடுக்கம்.. பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலா பகுதியில் இன்று அதிகாலையில் திடீர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் லேசாக குலுங்கி பொருட்கள் உருண்டதால் மக்கள் அலறியடித்து ஓடினார். இது ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் பதிவான நிலையில் சேதங்கள் பற்றிய எந்த விபரங்களும் உடனடியாக வெளியாகவில்லை.
இமயமலையையொட்டி அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்று இமாச்சல பிரதேசம். சமீபத்தில் அங்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.

இமயமலையையொட்டி உள்ளதால்இமாச்சல பிரேதசத்தில் பொதுவாக குளிராக உள்ளது. கோடை வாசஸ்தலமாக உள்ளது. தற்போது அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக தர்மசாலா உள்ளது. கிரிக்கெட் மைதானம் இங்கு உள்ளது. தர்மசாலாவில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் சம்பா என்ற பகுதி உள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் மக்கள் வீடுகளில் தூங்க சென்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5.17 மணியளவில் திடீரென்று சம்பா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகளில் உள்ள பொருட்கள் உருண்டு விழுந்ததால் தூக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்து திறந்த வெளியில் தஞ்சமடைந்தனர். இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

இந்த நிலநடுக்கத்தினால் அந்த பகுதியில் உள்ள மக்கள் சற்று அச்சமடைந்தனர். இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
இதுபற்றி தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறுகையில், ‛‛சம்பா பகுதியில் பிவான நிலநடுக்கம் 3.2 ரிக்டரில் பதிவாகி உள்ளது. பூமிக்கடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வு இருந்த நிலையில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications