For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

ஹரியாணா சட்டசபையின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் 27-ந் தேதியுடனும், மகாராஷ்டிர மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் மாதம் 8-ந் தேதியுடனும் முடிவடைகிறது.

அதே போல் ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதியுடனும், ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையின் பதவிக்காலம் ஜனவரி 19-ந் தேதியுடனும் முடிவடைகிறது.

இந்த அனைத்து மாநிலங்களுக்குமான தேர்தல் தேதியை அடுத்த வாரம் தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி ஆகிய பண்டிகைகள் உள்ளிட்டவற்றைப் பரிசீலித்து இந்த தேதிகள் அறிவிக்கப்படும்.

voters

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குளிர்கால தட்பவெப்ப நிலை, ஜார்க்கண்ட் மாநிலத்தின் நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினரைப் பணியில் ஈடுபடுத்துவது, ஜார்க்கண்டில் செப்டம்பர் மாதம் மழைக்காலம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டும் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும்.

சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
The election process for states going to polls is expected to be set in motion as the Election Commission is likely to announce dates in this regard in the middle of next week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X