For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரன் அடிப்பதைக் காட்டிலும் நடிப்பது ரொம்ப கஷ்டம் பாஸ்... இப்படிச் சொல்வது "காட்" சச்சின்!

Google Oneindia Tamil News

மும்பை: கிரிக்கெட் விளையாடுவதைவிட, திரைப்படங்களில் நடிப்பது மிகவும் கடினமான செயலாக இருப்பதாக கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

"சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற பெயரில் சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கைப் படமாக்கப்படுகிறது. இப்படத்தில் தனது கேரக்டரில் தானே நடிக்கிறார் சச்சின்.

பிரபல பிரிட்டன் இயக்குநர் ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கும் இப்படத்தின் டீஸர் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

விளம்பரத் தூதர்...

விளம்பரத் தூதர்...

இந்நிலையில், மும்பையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற உள்ள அரை மாரத்தான் போட்டிக்கான விளம்பரத் தூதராக சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார். அதுதொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தனது நடிப்பு அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

வித்தியாசமான அனுபவம்...

வித்தியாசமான அனுபவம்...

அப்போது அவர் கூறுகையில், "கடந்த பல ஆண்டுகளாக நான் என்ன விரும்புகிறேனோ, அதையே செய்தேன். கேமராக்கள் அதை படம்பிடித்தன. ஆனால், இப்போது கேமரா முன்பு நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டு, அதை நான் செய்யும்போது கேமராவில் படம் பிடிக்கப்படுகிறது. இது எனக்குச் சற்று வித்தியாசமாக உள்ளது.

ரொம்பக் கஷ்டம்...

ரொம்பக் கஷ்டம்...

உண்மையில், களத்தில் நின்று வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிப்பேன். ஆனால், கேமரா முன்பாக நின்று நடிப்பது எனக்கு கடினம்.

கிரிக்கெட் எளிது...

கிரிக்கெட் எளிது...

நடிப்பு என்பதை நான் கனவிலும் நினைத்ததில்லை. சந்தேகத்திற்கு இடமின்றி கூறுவேன்; கிரிக்கெட்டை விட நடிப்பது கடினம். என்னைப் பொறுத்த வரையில் கிரிக்கெட் விளையாடுவதே எனக்கு எளிதானது.

English summary
Sachin Tendulkar says facing the camera for his soon-to-be-released biopic has been more challenging than standing up to the fastest bowlers in the world and scoring runs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X