டெல்லியில் 6வது நாளாக போராட்டம்.. துடைப்பத்தால் அடித்துகொண்ட தமிழக விவசாயிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்தில் தங்களைத் தானே துடைப்பத்தால் அடித்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Farmers marched with half nude and hitting themselves with a broom stick

அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 50 விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில், விவசாயிகள் தங்கள் தலையில் தாங்களே செருப்பால் அடித்துக்கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இந்நிலையில் ஆறாவது நாளான இன்று விவசாயிகள் தங்களைத் தானே துடைப்பத்தால் அடித்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil farmers protest continues as 6th day in Delhi. Farmers marched with half nude and hitting themselves with a broom stick.
Please Wait while comments are loading...