வங்கி மோசடி விவகாரம்... ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேலுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் காலை முதல் மக்கள் அலைமோதுகிறார்கள்- வீடியோ

  டெல்லி : வங்கிகளில் தொழிலதிபர்கள் நடத்திய கடன் மோசடிகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு நாடாளுமன்ற நிலைக்குழு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு சம்மன் அளித்துள்ளது. நிலைக்குழு முன்பு மே 17ல் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி தலைமை வகிக்கிறார். வங்கிகள் துறை தொடர்பாக வீரப்ப மொய்லி நிதித்துறை சேவைகள் செயலாளர் ராஜிவ் குமாரிடம் சில கேள்விகளை முன் வைத்துள்ளார். இதன்படி வங்கிகளில் நடந்துள்ள மோசடிகள் மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் தர ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  Finance parliamentary standing comittee call for RBI governor Urjit patel to appear on May 17

  மே 17ம் தேதி உர்ஜித் படேல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்தக் குழுவின் உறுப்பினராக உள்ளார், அவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

  அண்மையில் உர்ஜித் படேல் பொதுத்துறை வங்கிகளை கையாளத் தேவையான அதிகாரம் ஆர்பிஐ வசம் இல்லை என்று கூறி இருந்தார். "ஆர்பிஐக்கு எந்த மாதிரியான அதிகாரம் தேவை என்பது தெரிய வேண்டும், அதற்கான திருத்தங்களைச் செய்யவே உர்ஜித் படேல் நேரில் அழைக்கப்பட்டுள்ளார் என நிலைக்குழுவினர் கூறியுள்ளதாக தெரிகிறது.

  பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி மோசடி மட்டுமின்றி அனைத்து வங்கிகளின் விவகாரங்களும் குறித்தும் நிலைக்குழு விவாதித்துள்ளது. நிதித்துறை அதிகாரிகள் தங்களது சட்ட ஆலோசகர்கள் மூலம் சில தகவல்களை மட்டுமே தந்துள்ளதாகவும், 3 வாரத்திற்குள் முழு விவரங்களை தாக்கல் செய்யுமாறு அவர்களுக்கு நிலைக்குழு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Reserve Bank of India Governor Urjit Patel has been summoned by a parliamentary panel to answer questions related to the recent scams that have hit the banking sector. He has been asked to appear before it on May 17.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற