பெங்களூர் பாரில் பயங்கர தீ.. 5 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பெங்களூரில் உள்ள தனியார் ஓட்டலில் பயங்கர தீ விபத்து-வீடியோ

  பெங்களூர்: பெங்களூரில் இருக்கும் கைலாஷ் பார் என்னும் ஹோட்டலில் மோசமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதிகாலையிலேயே விபத்து ஏற்பட்டதால் தீ வேகமாக பரவி இருக்கிறது.

  இந்த தீயை கட்டுப்படுத்த தீ அணைப்பு வீரர்கள் அதிக சிரமப்பட்டு இருக்கிறார்கள். ஹோட்டல் பார் என்பதால் ஆபத்தும் அதிகமாக இருந்துள்ளது.

  5 பேர் இதில் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இவர்கள் அந்த ஹோட்டலில் வேலை பார்த்த பணியாளர்கள் ஆவர்.

  கைலாஷ் பார்

  கைலாஷ் பார்

  பெங்களூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் கலாசிபாளையம் என்ற பகுதியில் இருக்கும் கைலாஷ் பாரில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அதிகாலை 2.30 மணிக்கு சரியாக தீ பிடித்து எரிந்து இருக்கிறது. இந்த பார் அங்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு மிக அருகில் உள்ளது.

  தீ அணைப்பு

  தீ அணைப்பு

  3 மணி நேரமாக கஷ்டப்பட்டு தீ அணைப்பு வீரர்கள் இந்த தீயை கட்டுப்படுத்தினார்கள். அங்கு மார்க்கெட்டில் காய்கறி இறக்கிய நபர்கள் இந்த தீயை பார்த்து தகவல் அளித்து இருக்கிறார்கள். மதுக்கடை என்பதால் தீயை அணைப்பது கஷ்டமானதாக இருந்துள்ளது.

  5 பேர் மரணம்

  5 பேர் மரணம்

  இந்த தீ விபத்தில் அங்கு தூங்கிக் கொண்டு இருந்த ஐந்து பேர் மரணம் அடைந்தனர். அதில் ஒருவர் பெண். சுவாமி, பிரசாத், மஞ்சுநாத், கீர்த்தி, மகேஷ் ஆகியோர் மரணம் அடைந்ததாக அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. இவர்கள் அந்த பாரில் வேலை பார்த்து வரும் பணியாளர்கள் ஆவர்.

  என்ன காரணம்

  என்ன காரணம்

  இதில் காயம் அடைந்த அனைவரும் பெங்களூரில் இருக்கும் விக்டோரியா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த விபத்திற்கு இதுவரை சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Fire spread all over in Bengaluru Kailash bar today morning. 5 people died in the fire including a woman. They were sleeping inside the bar.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற