For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூருக்கு வெள்ள அபாயம்.. கர்நாடக வானிலை மையம் எச்சரிக்கை

பெங்களூரில் அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என கர்நாடக மாநில வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெங்களூரு நகரில் வெள்ளம் வர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை- வீடியோ

    பெங்களூரு: அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என கர்நாடக மாநில வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    தென் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் வெப்ப சலனம் காரணமாகவும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் தமிழகத்தின் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

    நேற்று முன்தினம்

    நேற்று முன்தினம்

    நேற்று முன்தினம் பெங்களூரு பகுதியில் கொட்டிய கனமழையால் சுவர் இடிந்ததில் 25 வயது இளைஞர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.

    கண்காணிப்பு மையம் எச்சரிக்கை

    கண்காணிப்பு மையம் எச்சரிக்கை

    இந்நிலையில் பெங்களூருவில் அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ள பெருக்கு ஆபத்து உள்ளதாக அம்மாநில வானிலை மையம் மற்றும் கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது.

    கடுமையாக பாதிக்கப்படும்

    கடுமையாக பாதிக்கப்படும்

    பெங்களூருவின் தாழ்வானப் பகுதிகளான ராஜராஜேஸ்வரி நகர், கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மகாதேவபுரா மற்றும் பொம்மனஹல்லி ஆகிய ஐந்து பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கன மழை எச்சரிக்கை

    கன மழை எச்சரிக்கை

    மேலும் ஜூன் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நாள்தோறும் பிற்பகல் 2 மணிக்கு பிறகு மழை பெய்யும் என்றும் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தின் 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வடிகாலில் அடித்து செல்லப்பட்டார்

    வடிகாலில் அடித்து செல்லப்பட்டார்

    இதனிடையே மழை காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். சனிக்கிழமை கொட்டிய பலத்த மழையல் இம்ரான் நடாப் என்பவர் புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள வடிகாலில் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     பத்திரமாக இருங்க மக்களே

    பத்திரமாக இருங்க மக்களே

    பெங்களூர் கடந்த காலங்களில் பல வெள்ளங்களைச் சந்தித்துள்ள நகரம்தான். இருப்பினும் முன்னெச்சரிக்கை முக்கியம்.. எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பெங்களூர் மழை, வெள்ள நிலவரம் குறித்த உடனுக்குடன் நமது இணையதளத்தில் அறியலாம்.

    English summary
    Flood waring for Bengaluru in next 24 hours. Five of the eight zones will get flood and will be affected heavily.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X