For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புது வெள்ளை மழை இங்கு.. செம கூலாய்ருச்சு மூணாறு.. எங்கு பார்த்தாலும் உறை பனி!

Google Oneindia Tamil News

மூணாறு : மூணாறு நகரில் கடும் குளிர் வாட்டி வதைத்த வருகிறது. பகல் கொழதிலுள் கடுங்குளிர் காரணமாக வாகனங்கள் பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கடும் குளிர் நிலவும் என வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இந்நிலையில் மூணாறில் வரலாறு காணாத அளவிற்கு உறை பனி நிலவுகிறது. அதிகபட்சமாக செவ்வாய்க்கிழமையன்று மைனல் 2 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை நிலவியது.

Freezing temperatures, heavy snowfall in Munnar

குண்டலா, தேவிகுளம், லக்காட், தென்மலா, செந்துவாரா பகுதிகளில் கடந்த 2 வாரங்களாகவே வெப்பநிலை மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இதனால் தோட்டங்கள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளன.

நல்லதண்ணி பகுதியில் பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ், லட்சுமியில் மைனஸ் 1 டிகிரி செல்சியஸ், செவ்வன்மலாவில் பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ், அமைதி பல்லத்தாக்கில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ், தென்மலாவில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ், மட்டுப்பெட்டி பகதியில் 2 டிகிரி செல்சியஸ், செந்துருவாவில் 2 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை காணப்படுகிறது.

மரம், செடிகள், வீடுகள், வாகனங்கள் என அனைத்தும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளன. தோட்டக்கலை பயிரிடப்பட்ட பகுதிகளில் பூஜ்ஜியம் அளவிற்கு குறைவான அளவிலேயே வெப்பநிலை காணப்படுகிறது. இதனால் பகல் பொழுதில் கூட சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

English summary
Munnar town recorded freezing temperature of -2 degree celsius on Tuesday. This is the lowest daytime temperature recorded so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X