முட்டிக்கொண்ட மூன்று ரயில்கள்.. இந்தியா பக்கம் திரும்பிய சர்வதேச மீடியாக்கள்! உலக செய்தியான விபத்து
புவனேஷ்வர்: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளான சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது. முன்னணி உலக ஊடகங்கள் ஒடிசா விபத்தை உற்று நோக்கி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
கோரமண்டல் விரைவு ரயில் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்துகொண்டு இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை ஒடிசா மாநிலம் பாலசேர் அருகே இந்த ரயில் சென்று கொண்டு இருந்தபோது சரக்கு ரயில் மற்றும் டெல்லி துரந்தோ ரயில் மோதி தடம் புரண்டது.

இந்த கோர விபத்தில் 70 க்கும் அதிகமான ரயில் பயணிகள் உயிரிழந்து உள்ளார்கள் என்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து இருப்பதாகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வந்த வகையில் உள்ளார்கள். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் விபத்தில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
காயமடைந்தவர்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவமனைகளும் நிரம்பத் தொடங்கி இருக்கின்றன. ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படும் நிலையில் 10 பெட்டிகள் தடம் புரண்டு இருக்கலாம் என்று ஒன் இந்தியா தமிழிடம் பேசிய ரயில் பயணி வெங்கடேஷ் தெரிவித்தார்.

கோரமண்டல் ரயில் பாலசேரை தாண்டி வந்துகொண்டு இருக்கும்போது எதிரே டெல்லியில் இருந்து துரந்தோ ரயில் வந்ததாகவும். அப்போது 2 ரயில்கள் வந்த தண்டவாலங்களுக்கு இடையே சரக்கு ரயில் வந்தபோது, அது துரந்தோ ரயிலின் எஞ்சினுக்கு அருகே உள்ள பெட்டியின் மீது மோதியதாகவும், அத்துசன் கோரமண்டல் ரயில் தடம்புரண்டு துரந்தோ மீது இடித்ததாகவும் வெங்கடேஷ் கூறினார்.
விபத்து நிகழ்ந்த பகுதியில் வசிக்கும் மக்களின் ஒத்துழைப்புடன் தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர், போலீஸ், தீயணைப்பு துறையினர், மருத்துவர்கள், வருவாய் துறையினர் என அரசு துறைகளை சேர்ந்த அனைவரும் ஒடிசாவில் முகாமிட்டு உள்ளார்கள். இரவு நேரம் என்பதால் மீட்புப் பணியில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு இருக்கும் நிலையில் நாளையும் இப்பணி தொடரும் என்று கூறப்படுகிறது.
அரசு துறை அதிகாரிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களின் பார்வையும் ஒடிசாவை நோக்கி திரும்பி உள்ளது. ஏராளமான செய்தியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று நேரலை செய்து உடனுக்குடன் தகவல்களை தெரிவித்து வருகிறார்கள். இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி பல முன்னணி சர்வதேச ஊடகங்களும் ஒடிசா ரயில் விபத்து செய்தியை வெளியிட்டு உள்ளன.

பிரான்ஸை சேர்ந்த AFP செய்தி நிறுவனம் இந்த ரயில் விபத்து செய்தியை வெளியிட்டு இருக்கிறது. அதில் 50 பேர் விபத்தில் உயிரிழந்து இருப்பதாகவும் 500க்கும் அதிகமானோர் காயமடைந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. AFP செய்தி நிறுவனம் உலகின் பல முன்னணி ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கி வருகிறது. இந்த தகவலையே பல ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
உலகின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான அல் ஜசீராவும் இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது. கத்தாரை சேர்ந்த அல் ஜசீரா, கிழக்கு இந்தியாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 400 க்கும் அதிகமானோர் காயமடைந்து இருப்பதாகவும் பலர் உயிரிழந்து இருக்கலாம் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
அதேபோல் பிரிட்டனை சேர்ந்த தி கார்டியன் ஊடகமும் கிழக்கு இந்தியாவில் ரயில் விபத்து ஏற்பட்டதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது. 50 பேர் இறந்திருக்கலாம் என்றும், 300 க்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளதாகவும் அதன் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 64 ஆயிரம் கிலோ மீட்டர் ரயில் பாதையை கொண்ட உலகின் மிகப்பெரிய ரயில்வேயான இந்தியன் ரயில்வேயில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ரயில் விபத்துகள் ஏற்படுவதாக அந்த ஊடகம் தெரிவித்து உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications