கோவா சட்டசபை தேர்தல்: இரு சுயேச்சைகள் ஆதரவு.. கோவாவில் ஆட்சியை தக்க வைக்கிறதா பாஜக?
கோவா: கோவாவில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் தொங்கு சட்டசபை ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் இரு சுயேச்சை வேட்பாளர்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார்கள்.
Recommended Video
கோவாவில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அங்கு பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கோவா பார்வேர்டு கட்சியுடன் இணைந்து போட்டியிட்டுள்ளது. இதில் காங்கிஸ் 37 இடங்களிலும் கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது.
ஆம் ஆத்மியும் தனித்து 39 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன. அது போல் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சியும் இணைந்து தேர்தலை சந்தித்துள்ளன.

40 தொகுதிகள்
40 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 21 இடங்கள் தேவை. கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 13 தொகுதிகளில் பாஜகவும், 17 தொகுதிகளில் காங்கிரஸும் 3 தொகுதிகளில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் வென்றது. அது போல் உள்ளூர் கட்சியான மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி 3 தொகுதிகளிலும் வென்றது.

13 இடங்களில் வெற்றி
இந்த நிலையில் வெறும் 13 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக , அங்கிருக்கும் உள்ளூர் கட்சிகள், சுயேச்சைகளின் துணை கொண்டு மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது. இதனால் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றாலும் சட்டசபையில் பாஜக தனது பலத்தை நிரூபித்து ஆட்சியில் அமர்ந்தது.

எந்த கட்சி அமைக்கும்
இதனால் இந்த முறை எந்தக் கட்சி ஆட்சியை அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மனோகர் பாரிக்கரின் மகன் பாஜகவிலிருந்து விலகி விட்டதால் அக்கட்சிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அது போல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கோவா முன்னாள் முதல்வருமான லூயிசினோ ஃபெலேரோ அக்கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இது காங்கிரஸுக்கு பெரும் இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் கோவாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை தனிபெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் கட்சி தங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என காத்திருந்தார்கள். ஆனால் பாஜகவோ ஆளுநரை சந்தித்து தகிடுதத்தம் செய்து ஆட்சி அமைக்க உரிமை கோரி அதில் வெற்றியும் பெற்றது.

பாஜக
இந்த முறையும் வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே ஆளுநரை சந்திக்க பாஜகவினர் நேரம் கேட்டுள்ளனர். கடந்த முறை முட்டி மோதி காங்கிரஸ் தனது வெற்றியை இழந்துவிட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை ரிசார்ட்டில் வைத்துள்ளது. வேட்பாளர்களிடம் தாங்கள் வேறு கட்சிக்கு செல்ல மாட்டோம் என காங்கிரஸ் தலைமை சத்தியம் பெற்றுவிட்டது. கடந்த முறை போல் பாஜக தட்டி பறித்தது போல் இந்த முறையும் அதே நடக்க காங்கிரஸ் அவ்வளவு எளிதில் விட்டுவிடாது.

பாஜக ஆட்சி?
கோவாவில் பாஜக 5 இடங்களில் வென்றுள்ளது. 15 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. அது போல் காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் வென்று 8 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மகாராஷ்டிரவாதி கோமந்தக்-2; ஆம் ஆத்மி- 2; சுயேட்சைகள் 2; புரட்சிகர கோவா கட்சி-1; கோவா மக்கள் முன்னணி-1; கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போதைய நிலையில் ஒரு இடத்திலும் முன்னணியில் இல்லை. சுயேச்சைகள் இருவர் வென்றுளளனர். கோவாவில் ஆட்சியை அமைக்க பெரும்பான்மையை பெற 21 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கு அந்த எண்ணிக்கை கிடைக்கவில்லை என்பதால் கோவாவில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் டாக்டர் சந்திரகாந்த் சேத்யே , அலெக்சியோ ரெஜினால்டோ ஆகிய இருவரும் பாஜகவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர். பாஜக 5 இடங்களில் வென்று 15 இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் , சுயேச்சைகளின் துணைக் கொண்டு பாஜக ஆட்சி அமையும் என தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி கட்சிகள் வாக்குகள் சதவீதம்: பாஜக- 33.40%; காங்கிரஸ் 23.33%; மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 7.70%; ஆம் ஆத்மி 6.78%; திரிணாமுல் காங்கிரஸ் 5.23%; கோவா மக்கள் முன்னணி 1.81%; நோட்டா 1.12% ஆகும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications