For Daily Alerts
"இந்தியா இந்து தேசம்"தான் கருத்துக்கு கோவா துணை முதல்வர் மன்னிப்பு கோரினார்!
பனாஜி: இந்தியா இந்து தேசம்தான் என கருத்து தெரிவித்த கோவா துணை முதல்வர் பிரான்சிஸ் டிசோசா மன்னிப்பு கோரியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா இந்து தேசமாக உருவெடுக்கும் என்ற கோவா அமைச்சர் தீபக் தவலிகர் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கோவா துணை முதல்வர் டிசோசா கருத்து தெரிவித்திருந்தார்.

கோவா துணை முதல்வர் பிரான்சிஸ் டிசோசா கூறியதாவது:
- அமைச்சர் தவலிகரின் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
- இந்தியா இந்து தேசம்தான். இந்தியா இந்து நாடாக இருக்கிறது.. இனிமேலும் இந்து நாடாகவே இருக்கும்.
- இந்தியா என்பது இந்துஸ்தானம். இந்துஸ்தானில் உள்ள நான் உட்பட அனைவருமே இந்துக்கள்தான்.
- நான் கிறிஸ்துவ இந்து. நான் இந்துஸ்தானத்தைச் சேர்ந்தவன். ஆகவே, நீங்கள் இந்தியாவை இந்து நாடாக்க வேண்டியதில்லை.
- எந்தவொரு விஷயத்தையும் சர்ச்சைக்குரியதாக்கும் சுதந்திரம் மக்களுக்கு உண்டு. இந்தியா சுதந்திர நாடு.
- நாம் அனைவருடனும் இணைந்து செயல்பட வேண்டும். இது ஒருங்கிணைந்த ஜனநாயகம்.
டிசோசாவின் இக்கருத்தும் மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.
டிசோசாவின் மன்னிப்பு:
- என்னுடைய கருத்து ஒருவேளை தவறாக இருக்கலாம்.
- இந்து என்பது என்னுடைய கலாசாரம்
- கிறிஸ்துவம் என்பது என்னுடைய மதம்.
- இந்து கலாசாரம் என்பது 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
- கிறிஸ்துவம் என்பது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
- யாருடைய உணர்வையும் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்