கடற்கரையில் 2 சிறுமிகள் பலாத்காரம்.. அவர்கள் ஏன் இரவில் அங்கு தங்கினர்.. பாஜக முதல்வர் சர்ச்சை பேச்சு
பனாஜி: கோவா மாநிலத்தில் தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 30 கி.மீ தெற்கே பெனாலிம் என்ற அழகிய கடற்கரை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் பதின்ம வயது கொண்ட 2 சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கடற்கரையில் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் எனக்கூறி 2 சிறுவர்களையும் கடுமையாக தாக்கினார்கள். பின்னர் அந்த 2 சிறுமிகளையும் மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

சிறுமிகள் பலாத்காரம்
பாதிக்கப்பட்ட 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் கோவா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிறுமிகளை சீரழித்த 4 பேர் கும்பலை சேர்ந்த ஒருவன் கோவா விவசாயத் துறையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறான். இந்த பிரச்னை கோவா சட்டமன்றத்தில் கடுமையாக எதிரொலித்தது.

முதல்வர் சர்ச்சை பேச்சு
ஆளும் கட்சியில் செல்வாக்கு உள்ள எம்.எல்.ஏ ஒருவர் குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் சட்டசபையில் தெரிவித்த கருத்துதான் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பிரமோத் சாவந்த் கூறியதாவது:- பெனாலிம் கடற்கரையில் நடந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்கரையில் பார்ட்டி
இந்த சம்பவம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று நாம் நேரடியாக போலீசாரை குற்றம் சாட்டுகிறோம். பார்ட்டிக்காக கடற்கரைக்குச் சென்ற 10 பேரில் ஆறு பேர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். மீதமுள்ள 4 பேர் மட்டுமே இரவு முழுவதும் கடற்கரையில் தங்கி உள்ளனர். அதன் பிறகே இந்த சம்பவம் நடந்துள்ளது. பதின்ம வயது சிறுவர்கள், சிறுமிகள் இரவு முழுவதும் கடற்கரையில் இருந்தார்கள்.

அரசு பொறுப்பேற்க முடியாது
பதின்ம வயதில் உள்ளவர்கள் கடற்கரைகளில் இரவுகளை கழிக்கக்கூடாது. 14 வயது சிறுவர், சிறுமிகள் இரவு முழுவதும் ஏன் கடற்கரையில் தங்கி இருந்தர்கள் என்பதை அவர்களின் பெற்றோர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பெற்றோர்களின் குரலுக்கு குழந்தைகள் செவிசாய்ப்பதில்லை. எனவே அரசும், காவல் துறையும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க முடியாது' என்று பிரமோத் சாவந்த் கூறினார்.

வெளியே அனுப்ப கூடாது
தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பெற்றோருக்கு ஒரு பொறுப்பு இருப்பதாகக் கூறிய பிரமோத் சாவந்த் குழந்தைகளை, குறிப்பாக பதின்ம வயதில் உள்ள சிறுவர்களை இரவில் வெளியே அனுப்ப கூடாது என்று சூசகமாகக் கூறினார். முதல்வரின் இந்த கருத்துக்கு எதிக்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுபோன்ற அறிக்கைகளை முதல்வர் வெளியிடுவது வெறுக்கத்தக்கது என்று கோவா பார்வர்டு கட்சி எம்.எல்.ஏ விஜய் சர்தேசாய் கூறினார்.

முதல்வர் பதவி விலகணும்
"குடிமக்களின் பாதுகாப்பு என்பது காவல்துறை மற்றும் மாநில அரசின் பொறுப்பாகும். அவர்கள் அதை குடிமக்களுக்கு வழங்க முடியாவிட்டால், முதல்வர் பதவியில் அமர உரிமை இல்லை'' என்று விஜய் சர்தேசாய் கடுமையாக தாக்கினார். ''இரவில் வெளியே செல்வதற்கு மக்கள் ஏன் பயப்பட வேண்டும்? குற்றவாளிகள் சிறையில் இருக்க வேண்டும். சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் சுதந்திரமாக வெளியே செல்ல வேண்டும்'' என்று கோவா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆல்டோன் டி கோஸ்டா தெரிவித்தார்.

வரலாறு மாறி விட்டது
''பாதுகாப்பு இல்லை என்று கூறி இரவில் தங்கள் குழந்தைகளை வெளியே செல்ல அனுமதித்ததற்காக முதல்வர் பெற்றோரை குற்றம் சாட்டுவது அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதிப்படுத்த முடியாவிட்டால், அதை யார் கொடுக்க முடியும்? பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்ந்த வரலாறு கோவாவுக்கு உள்ளது. இந்த வரலாறு இப்போது பாஜக ஆட்சியில் இழைக்கப்படுகிறது'' என்று சுயேச்சை எம்.எல்.ஏ ரோஹன் கவுண்டே கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications