For Daily Alerts
பெண்கள் மினி ஸ்கர்ட் அணிய கோவா அமைச்சர் எதிர்ப்பு... அமைச்சருக்கு ஸ்கர்ட் அனுப்ப காங். முடிவு

கோவா அமைச்சர் சுதின் தவலிகர் அளித்த பேட்டியொன்றில் "இளம் பெண்கள் இரவு நேரங்களில், பப்புகளுக்கு குட்டை ஆடைகளை அணிந்துகொண்டு செல்வது நமது கலாசாரத்திற்கு ஒத்துவராது. கோவா மாநில கலாசாரம் இப்போதுதான் இவ்வாறு மாறியுள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இதே கருத்தை ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். முத்தாலிக் கருத்தில் தவறு இல்லை என்றும் கோவா அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் துர்கதாஸ் காமத் அளித்த பேட்டியில், பொதுப்பணித்துறை அமைச்சருக்கு நாங்கள் ஒரு புத்தம் புது மினி ஸ்கர்ட் அனுப்பி வைக்க உள்ளோம். இதன் மூலம் ஸ்கர்ட் ஒரு கலாச்சாரத்தை பாதிக்காது என்பதை நிரூபிக்க உள்ளோம் என்றார்.