For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

71-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் கூகுள்! நாடாளுமன்றத்தின் முகப்பை டூடிலாக வைத்து அசத்தல்

கூகுள் நிறுவனம் தேடுதல் பக்கத்தில் நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்றத்தின் முகப்பு வடிவத்தில் டூடில் அமைத்து அசத்தியுள்ளது.

By Devarajan
Google Oneindia Tamil News

டெல்லி: கூகுள் நிறுவனம் நாட்டின் 71-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்றத்தின் முகப்பு வடிவத்தில், தேடுதல் பக்கத்தின் டூடிலை அமைத்து அசத்தியுள்ளது. இந்த கூகுள் முகப்பு இப்போது வைரலாகியுள்ளது. சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளும் குவிந்துள்ளன.

கூகுள் முகப்பு பக்கம், இணையதள உலகில் மிகப் பிரபலமான ஒன்று. அவ்வப்பொழுது அதன் முகப்புப்பக்கம் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கும். உலகின் முக்கிய நிகழ்வுகள், பிரபல சம்பவங்கள் உள்ளிட்டவற்றின் வடிவமாக கூகுள் முகப்பு வடிவமைக்கப்படும்.

 71-வது சுதந்திர தினம்

71-வது சுதந்திர தினம்

இந்த புதிய முயற்சிகள் சமூக வலைத்தளங்களின் ட்ரெண்டிங் பட்டியலில் முதன்மையாகவும் இருக்கும். இந்த நிலையில்,நாடு முழுவதும் இன்று 71 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 மூவர்ண டூடில்

மூவர்ண டூடில்

இந்த நிலையில், நாட்டின் தேசிய கொடியின் மூவர்ணத்தில் கூகுள் டூடில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மும்பையைச் சேர்ந்த ஓவியர் சபீனா கார்னிக், என்பவர் வடிமைத்துள்ளார்.

 விளக்கம்

விளக்கம்

இது தொடர்பாக கூகுள் நிறுவனம், " இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாட கூகுள் முடிவெடுத்த நிலையில், அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், மும்பையை சேர்ந்த ஓவியர் சபீனா கார்னிக், 'பேப்பர் கட் ஆர்ட்' ஸ்டைலில் வடிவமைத்த நாடாளுமன்றத்ததன் முகப்பு வடிவம் சிறப்பாக இருந்தது. அதனால் அதனை கூகுள் முகப்பாக வைத்துள்ளோம்" என்று கூறியுள்ளது.

 எவை எவை?

எவை எவை?

இந்த முகப்பில், நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையில் உள்ள அசோகர் சக்கரம், மற்றும் தேசிய பறவையான மயில், நாடாளுமன்ற முகப்பு ஆகியவை ஆரஞ்சு வெள்ளை பச்சை நிறத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டுஉள்ளன.

English summary
Today India is celebrating the completion of 71 years of Independence day. Google has come out with a colourful doodle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X