குழந்தைகளை விட ஹோல் பஞ்சர் பெருசா?... ஏண்ணே சுந்தர் பிச்சை.. இதையெல்லாம் கேட்கிறதில்லையா??

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்காமல் புறக்கணித்து இருக்கிறது கூகுள் நிறுவனம். சென்ற வருடம் கூகுள் குழந்தைகள் தினத்தை கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் தினத்திற்கு தனது டூடுலில் புகைப்படம் வைக்காமல் ஹோல் பங்சரின் புகைப்படத்தை வைத்து இருக்கிறது. கூகுளின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சுந்தர் பிச்சை இந்தியராக இருந்து கொண்டு இப்படி இந்தியாவின் முக்கிய நாளுக்கு கூட மரியாதை செலுத்தாமல் இருக்கிறாரே என பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

 வாழ்த்து தெரிவிக்கும் கூகுள் டூடுல்

வாழ்த்து தெரிவிக்கும் கூகுள் டூடுல்

பொதுவாக உலகில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளுக்கு எல்லாம் கூகுள் டூடுல் வெளியிடுவது வழக்கம். பெரும்பாலும் பிறந்த நாள், சிறந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நாள் என பலவற்றிற்கு கூகுள் டூடுல் வெளியிடும்.நம்முடைய பிறந்தநாளை ஜிமெயில் மூலமாக தெரிந்து கொண்டு, நமக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்கும் அளவுக்கு கூகுள் இந்த டூடுலை பயன்படுத்தி வருகிறது. ஆனால் கூகுள் தற்போது இந்த டூடுலில் குழந்தைகள் தினத்தை புறக்கணித்து இருக்கிறது.

 ஹோல் பஞ்சர்தான் பெரிசு

ஹோல் பஞ்சர்தான் பெரிசு

இந்தியாவில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து சொல்லாமல் ஹோல் பஞ்சருக்கு கூகுள் வாழ்த்து கூறியிருக்கிறது. அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஹோல் பஞ்சர் கண்டுபிடிக்கப்பட்டு இன்றோடு 131 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் கூகுளின் இந்த செயலுக்கு எதிராக பலரும் பேசி வருகின்றனர். கூகுள் சிஇஓவான இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சையிடம் பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

எதுக்காக கொண்டாடல

டிவிட்டரில் இதுகுறித்து கோபப்பட்டிருக்கும் நபர் ஒருவர் ''ஏன் குழந்தைகள் தினத்துக்கு பதிலாக ஹோல் பஞ்சருக்கு தினம் கொண்டாடுறீங்க. இதுக்கு சரியான காரணம் சொல்லுங்க'' என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் கேட்டு இருக்கிறார்.

இந்தியா மட்டும் தக்காளி தொக்கா

தற்போது இந்த விஷயம் வேறொரு வகையிலும் விவாதிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்பட்ட குழந்தைகள் தினத்திற்கு கூகுள் டூடுல் வெளியிட்டு இருக்கிறது. அதேபோல் ஜெர்மனியின் குழந்தைகள் தினத்திற்கும் டூடுல் வெளியிட்டு இருக்கிறது. ஆனால் இந்தியாவை மட்டும் புறக்கணித்து இருக்கிறது. இதனால் டிவிட்டரில் இன்னும் நிறைய பேர் கூகுளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Today Google celebrate The 131st anniversary of the invention of the hole puncher with a Google Doodle. At the same time Google forgot to wish for children's day in India.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற