தாஜ் மஹாலின் உள் இருக்கும் சமாதியை பார்க்க சிறப்பு டிக்கெட்... எதுக்கு தெரியுமா திடீர் கட்டணம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி : மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா தாஜ்மஹால் உள்ளிருக்கும் சமாதியை சுற்றிப் பார்க்க இனி சுற்றுலாவாசிகளிடம் ரூ. 200 சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

காதலின் நினைவுச் சின்னமாக இருக்கும் தாஜ்மஹாலின் நுழைவுக் கட்டணமானது ரூ. 40ல் இருந்து ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதோடு ஏப்ரல் 1ம் தேதி முதல் சிறப்பு கட்டணமாக ரூ. 200 வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தாஜ்மஹாலின் உள்ளே இருக்கும் சமாதியை பார்க்கச் செல்வோரிடம் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா, தாஜ்மஹாலுக்கு வரும் அனைவருமே உள்ளே இருக்கும் சமாதியை பார்க்க விரும்புவதில்லை. லாப நோக்கத்துடன் இந்த சிறப்பு கட்டணம் அறிவிக்கப்படவில்லை, 17வது நூற்றாண்டின் சிறப்பை உணர்த்தும் இந்த வேலைப்பாட்டை பாதுகாக்கும் விதமாகவே கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பாதுகாக்கும் நடவடிக்கை

பாதுகாக்கும் நடவடிக்கை

வரும்கால தலைமுறைகளுக்கு தாஜ்மஹாலை பத்திரப்படுத்தித் தர வேண்டியது நம்முடைய பொறுப்பு. இதே போன்று புதிய பார்கோடு வசதிகளுடன் கூடிய ரூ. 50 டிக்கெட் வழங்கப்பட உள்ளது. இந்த டிக்கெட் 3 மணி நேரம் மட்டுமே செல்லும்.

சுற்றிப் பார்க்க நேரக்கட்டுப்பாடு

சுற்றிப் பார்க்க நேரக்கட்டுப்பாடு

சுற்றுலாப்பயணிகள் நீண்ட நேரம் தாஜ்மஹாலில் செலவிடுவதால் அதன் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுவதாக இந்திய தொல்லியல் துறை மற்றும் தேசிய சுற்றப்புற பொறியியல் அய்வு மையம் அளித்த தகவலின் அடிப்படையில் 3 மணி நேரம் மட்டுமே செல்லும் வகையிலான டிக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.

ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர்

ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர்

நாள் ஒன்றிற்கு சுமார் 1 லட்சம் சுற்றுலாப் பயணிகளை தாஜ்மஹால் கொண்டுள்ளது. இந்த நேர வரையறை என்பது அதன் அவசியமானது தான் என்றும் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

சிறப்பு வசதிகள்

சிறப்பு வசதிகள்

ஷாஜகானின் மெஹ்தப் பாகில் தாஜ்மஹாலின் இரவுக் காட்சியை யமுனை நதிக்கரையின் எதிரே இருந்து ரசிப்பதற்கான திட்டங்களையும் கலாச்சார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதே போன்று அதிக கட்டணம் செலுத்தி தாஜ்மஹாலை சுற்றி பார்க்க நினைப்பவர்களுக்கு சிறப்பு வசதிகளும் செய்யப்பட உள்ளனவாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union Minister of Culture Mahesh Sharma announcced that those who visit the Taj Mahal are interested in entering the mausoleum, have to pay special ticket of Rs 200.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற