For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஆட்டிஸம்" பாதித்த குழந்தைகளின் பெற்றோருக்கு "டிரான்ஸ்பர்" கூடாது– மத்திய அரசு உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: அரசுப் பணியில் உள்ள, ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பணியிடமாற்றம் செய்யக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்தியப் பணியாளர் நலன், பயிற்சித் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், "ஆட்டிஸம் என்னும் மனநல சார்ந்த தனித்திறன் உள்ள குழந்தைகள் மீது தொடர்ந்து அதிகபட்ச கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

Govt staff with autistic children spared from transfer postings

இதைக் கருத்தில் கொண்டு "ஆட்டிஸம்" உள்ளவர்களை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்ப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே "ஆட்டிஸம்" உள்ள குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்களை பணியிடமாற்றம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், பணியிட மாறுதலை ஏற்க மறுக்கும் அத்தகைய அரசு ஊழியர்களை கட்டாய ஓய்வு பெறுமாறும் வலியுறுத்தக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Government employees can now attend to their autistic children without worrying about being displaced on account of routine transfers or rotational transfer exercise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X