For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதார் அட்டை வழங்கும் பணிகளை மார்ச்சுக்குள் முடிக்க வேண்டும்: பிரதமர் அலுவலகம் உத்தரவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஆதார் அட்டை வழங்கும் திட்டப் பணியை வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்குமாறு பிரதமர் அலுவலகம் பொது அடையாள எண் ஆணையத்துக்கு (UIDAI ) உத்தரவிட்டுள்ளது.

ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி வட மாநிலங்களில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 70 கோடி மக்களுக்கு ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.

Govt wants Aadhar listing over my March

இனி வரும் காலத்தில் அனைத்து விதமான சேவைகளுக்கான அடையாள ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே ஆதார் அட்டை வழங்கும் திட்டப் பணியை வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்குமாறு என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவகத்துக்கும், ஆதார் அடையாள எண் வாரியத்துக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம், புதிய அரசு பதவியேற்ற பிறகு கிடப்பில் போடப்பட்டது. இப்போது மீண்டும் அதை துரிதப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

English summary
The Prime Minister’s Office has, meanwhile, directed the Unique Identification Authority of India and the National Population Register to complete the Aadhaar enrolment of the entire population by March next year. UIDAI has already issued over 70 crore Aadhar numbers across the country. The Modi government is, however, set to go ahead with Aadhaar to implement social schemes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X