கவுரி லங்கேஷை போல இன்னொரு எழுத்தாளரையும் கொல்ல பணம் தந்தனர்: இந்துத்துவா தீவிரவாதி வாக்குமூலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கவுரி லங்கேஷ் போல மற்றொரு எழுத்தாளரையும் கொலை செய்ய திட்டம்- வீடியோ

  பெங்களூர்: கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளி அடுத்து இன்னொரு எழுத்தாளரையும் கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  கர்நாடகாவில் ''பத்திரிக்கா" என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ். தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார்.

  இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் நடு சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் முக்கியமான குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

  முக்கியமானவர்

  முக்கியமானவர்

  சில நாட்களுக்கு முன்பு இந்த கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த முக்கியமான நிர்வாகியான கே டி நவீன் குமார் கைது செய்யப்பட்டார். இதில் இவர்தான் முக்கிய குற்றவாளி என்று போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

  அடுத்தது

  அடுத்தது

  இந்த நிலையில் கே டி நவீன் குமார் முக்கியமான வாக்குமூலம் ஒன்று கொடுத்து இருக்கிறார். இவர் முதல் கொலை மிகவும் கச்சிதமாக செய்த காரணத்தால் அடுத்த கொலைக்கும் இவருக்கும் பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான பணம் கொடுத்தது யார் என்று இன்னும் போலீஸ் தெரிவிக்கவில்லை.

  யாரை கொலை செய்ய

  யாரை கொலை செய்ய

  கவுரி லங்கேஷுக்கு அடுத்து இவர்கள் குறித்து வைத்து இருந்தது கேஎஸ் பகவான் என்ற எழுத்தாளர். பகுத்தறிவாதியான இவர் இந்துத்துவா அமைப்புகளுக்கு பெரிய சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். இதனால் இவரை எப்படி கொலை செய்ய வேண்டும் என்று நவீனுக்கு உத்தரவு சென்று இருக்கிறது.

  அப்போதுதான் மாட்டினார்

  அப்போதுதான் மாட்டினார்

  இவரை கொலை செய்ய துப்பாக்கி, குண்டுகள் வாங்க சென்ற போதுதான் நவீன் போலீசால் கைது செய்யபட்டார். இவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட இருக்கிறது. இதனால் பல முக்கியமான தலைகள் கர்நாடகாவில் கைதாக வாய்ப்புள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Gowri lankesh was one who killed by Hindu Yuva Sena leader KT Naveen Kumaran a few months ago. Gowri lankesh murderer plans to kill another writer K S Bhagwan in Karnataka.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற