ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பிறகு எந்தெந்த கார்கள் விலை குறையும்? #gstrollout

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால், சொகுசு கார்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே சமயம் சிறிய ரக கார்களின் விலை ஏறக் கூடும் என்றே கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் மனம் குளிர்ந்துள்ளதா இல்லை ஈட்டியை பாய்ச்சுவது போல் உள்ளதா என்பதை பார்ப்போம்.

நாடு முழுவதும் ஒரே வரி என்ற சரக்கு மற்றும் சேவை வரி நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது.

நாட்டிலேயே மிகப் பெரிய வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி ஆகும். இதன் மூலம் நுகர்வோரும், உற்பத்தியாளர்களும் மனநிறைவுடன் தொழில் செய்ய வித்திடும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.

 இரு சக்கர வாகனங்கள்

இரு சக்கர வாகனங்கள்

இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால் இரு சக்கர வாகனங்களின் விலை ஏற உள்ளது என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயம்தான். ஆனால் ஜிஎஸ்டி கார்களின் விலையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். தற்போதைய வரி அமைப்பின் படி, காரை வாங்கும் நுகர்வோர் வாட் வரி செஸ் வரி (சில மாநிலங்களில் மட்டும்) மற்றும் பசுமை செஸ் வரி ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர். ஆனால் அந்த நடைமுறை தற்போது மாறுகிறது. வாடிக்கையாளர்கள் வசிக்கும் மாநிலங்களுக்கேற்பட வரிகள் மாறுபடும். அதனால்தான் கார்களின் எக்ஸ் ஷோரூம் விலைகள் மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடுகிறது.

 காருக்கு எத்தனை சதவீதம்?

காருக்கு எத்தனை சதவீதம்?

அனைத்து வகையான கார்களுக்கும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதோடு, அதன் விலைக்கேற்ப செஸ் வரியும் செலுத்த வேண்டியுள்ளது. சிறிய ரகம், பெரிய அல்லது சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவிக்கள் என கார்களின் தரத்தின் அடிப்படையில் கூடுதலாக 3 முதல் 15 சதவீதம் வரை செஸ் வரி விதிக்கப்படுகிறது.

 சிறிய கார்கள் எவை

சிறிய கார்கள் எவை

4 மீட்டர் நீளம் கொண்டும் பெட்ரோலை எரிபொருளாக பயன்படுத்தும் கார்களுக்கு தற்போது வாடிக்கையாளர் வாங்கும் மாநிலங்களுக்கு ஏற்ப 26 முதல் 28 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி-யின்படி, பெட்ரோல் மூலம் இயங்கும் கார்களுக்கு கூடுதலாக செஸ் வரி 1 சதவீதமும், டீசல் மூலம் இயங்கும் கார்களுக்கு செஸ் வரி 3 சதவீதமும் , அதாவது 28 சதவீதத்துக்கும் மேல் விதிக்கப்படும். இதில் மாருதி சுசுகி ஆல்டோ, செலிரியோ, வேகன் ஆர், இக்னிஸ், பலினோ, ரெனால்ட் க்விட், ஹூண்டாய் இயான் மற்றும் ஐ 20 ஆகிய கார்களின் விலை மாறுபடுகிறது.

 சிறிய ரக டீசல் கார்கள் எவை

சிறிய ரக டீசல் கார்கள் எவை

சிறிய ரக டீசல் கார்களுக்கு 31 சதவீதம் வரி விதிக்கப்படும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் சென்ட், மாருதி சுசுகி டிசையர், டாடா டிகார் உள்ளிட்ட கார்களின் விலை மாறுபடும். 4 மீட்டருக்கு மேல் உள்ள கார்களுக்கும், 1500 சிசி-க்கும் குறைவான கார்களுக்கும் 43 சதவீதம் வரி விதிக்கப்படும். இதில் ஹோண்டா சிட்டி, விடபிள்யூ வென்டோ மற்றும் மாருதி சுசுகி சியாஸ் உள்ளிட்ட கார்கள் அடங்கும். எனவே இவற்றின் விலை கூடும்

 சொகுசு கார்கள்

சொகுசு கார்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் சி- கிளாஸ், ஆடி ஏ4, பிஎம்டபிள்யூ 3 உள்ளிட்ட கார்களுக்கு தற்போது 44.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. புதிய வரி விதிப்பில் அவை 43.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. அதாவது ஆடி ஏ 4 கார் தற்போதைய விலையில் ரூ.40000 வரை குறையும்.

 எஸ்யூவி கார்கள்

எஸ்யூவி கார்கள்

எஸ்யூவி ரக கார்கள் மீது தற்போது 48 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் ஜிஎஸ்டி வரியின்படி 28 சதவீதம் வரியும், 15 சதவீதம் கூடுதல் செஸ் வரியும் என மொத்தம் 43 சதவீதம் எஸ்யூவிக்களுக்கு விதிக்கப்படுகிறது. எனவே அவற்றின் விலை குறையும். டோயோடா பார்ச்சூனர், போர்ட் என்டவர், புதிதாக அறிமுகமான வோல்ஸ்வேகன் டிகான் உள்ளிட்ட கார்களுக்கு டெல்லியில் ரூ.1 லட்சம் விலை குறைக்கப்படும். இன்னும் சொல்ல போனால் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள டாடாவின் பிரீமியம் எஸ்யூவி கார்களும் விலை குறையும்.

 கார் தொழிலுக்கு வரப்பிரசாதம்

கார் தொழிலுக்கு வரப்பிரசாதம்

ஜிஎஸ்டியை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது கார் தொழிலுக்கு சாதகமான சூழலே அமையும். சிறிய ரக கார்கள் சிறிது விலையேறும், சொகுசு ரக கார்கள், எஸ்யூவி கார்கள் ஆகியவற்றின் விலை குறையும். என்னதான் பொருளாதார நிபுணர்கள் இதை குத்து மதிப்பாக கணக்கிட்டாலும் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம். மேலும் இறக்குமதி செய்யப்படும் கார்களின் வரி குறித்து தெளிவை பெற பொறுத்திருந்தே ஆக வேண்டும்.

 மக்கள் ஆர்வம் எதில்

மக்கள் ஆர்வம் எதில்

சொகுசு கார்கள், எஸ்யூவிக்களின் விலை குறையும் என்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுவாக கார் எரிந்து நடைபெறும் விபத்துகளில் மேற்கண்ட கார்களே உள்ளன. இதனால் இந்த கார்கள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவது சந்தேகமே.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
GST will be implemented from July 1st. Small Cars to be Expensive; Luxury Cars to get cheaper
Please Wait while comments are loading...