For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் வெற்றிபெற போவது யார்? பாஜக எத்தனை இடங்களில் வெல்லும்? கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

காந்தி நகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக கட்சி மாபெரும் வெற்றியை பெற்று 7வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்று இதுவரை வெளியான அனைத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. 7 வது முறையாக மாநிலத்தில் ஆட்சி அமைப்பதன் மூலம் பாஜக கட்சி புதிய ரெக்கார்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது.முதல் கட்ட தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவானது. அங்கு மெஜாரிட்டி பெற 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று 14 மாவட்டங்களில் உள்ள 93 இடங்களில் நடைபெற்றது. குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்த தேர்தலில் 60 சதவிகித வாக்குகள் வரை பதிவாகி உள்ளன. குஜராத்தில் கடந்த 27 வருடமாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. குஜராத் பாஜகவின் கோட்டையாக உள்ளது. 1995ல் இருந்து அங்கு பாஜக ஆட்சிதான் உள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் கருத்து கணிப்புகளும் குஜராத்தில் பாஜக ஆட்சிதான் மீண்டும் அமையும் என்று தெரிவித்து உள்ளது.

 குஜராத் தேர்தல்.. தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய பிரதமரின் தாய்.. நெகிழ்ந்த வாக்காளர்கள் குஜராத் தேர்தல்.. தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய பிரதமரின் தாய்.. நெகிழ்ந்த வாக்காளர்கள்

 ரிபப்ளிக் டிவி

ரிபப்ளிக் டிவி

குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக பாஜக 128 -148 இடங்களை பெற்று வெற்றிபெறும் என்று ரிபப்ளிக் டிவி - P-MARQ கணிப்பு வெளியிட்டு உள்ளது. குஜராத் எக்சிட் போலின்படி காங்கிரஸ் 30 - 42 இடங்களை பெறும் என்று ரிபப்ளிக் டிவி கணிப்பு வெளியிட்டு உள்ளது. அதாவது கடந்த தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களை வென்றது. அதில் இருந்து 30க்கும் மேற்பட்ட இடங்களை காங்கிரஸ் இழக்கும். அதாவது காங்கிரசுக்கு இது படுதோல்வி என்று கணிப்பு தெரிவிக்கிறது. மேலும்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி 2 - 10 இடங்களை பெறும் என்று இந்த ரிபப்ளிக் டிவி கணிப்பு தெரிவிக்கிறது.

இந்தியா டுடே

இந்தியா டுடே

குஜராத்தில் பாஜக 131-151 இடங்களை பெற்று வெல்லும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு வெளியிட்டுள்ளது. பாஜக 2017 தேர்தலில் 99 இடங்களை மட்டுமே வென்ற நிலையில் இந்த முறை 128 -148 இடங்களை பெற்று வெற்றிபெறும் என்று இந்தியா டுடே கணிப்பு வெளியிட்டு உள்ளது. காங்கிரஸ் 16-30 இடங்களை வெல்லும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு தெரிவிக்கிறது. இருந்த இடங்களையும் இழக்கும் மோசமான நிலையில் காங்கிரஸ் உள்ளது. ஆம் ஆத்மி 9-21 இடங்களை வெல்லும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு தெரிவித்து உள்ளது.

டிவி 9 குஜராத்தி

டிவி 9 குஜராத்தி

குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்றும் டிவி 9 குஜராத்தி கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அக்கட்சி இந்த தேர்தலில் 125 முதல் 130 இடங்களில் வெற்றிபெறும் என்று இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 40 முதல் 50 இடங்களில் வெற்றிபெறும் என்று டிவி 9 குஜராத்தி தெரிவித்து உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 3 முதல் 5 இடங்களில் மட்டுமே வெற்றியை பெறும் என டிவி 9 குஜராத்தி தெரிவித்து உள்ளது.

ஆஜ் தாக் - ஆக்சிஸ் மை இந்தியா

ஆஜ் தாக் - ஆக்சிஸ் மை இந்தியா

ஆஜ் தாக் - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்து கணிப்பில் குஜராத்தில் பாஜக 129-151 இடங்களை பெற்று வெல்லும். காங்கிரஸ் 16-30 இடங்களை வெல்லும். ஆம் ஆத்மி 9-21 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏபிபி - சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் குஜராத்தில் பாஜக 128-140 இடங்களை பெற்று வெல்லும். காங்கிரஸ் 31-43 இடங்களை வெல்லும். ஆம் ஆத்மி 3-11 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா நடத்திய கருத்து கணிப்பில் குஜராத்தில் பாஜக 150 இடங்களை பெற்று வெல்லும். காங்கிரஸ் 19 இடங்களை வெல்லும். ஆம் ஆத்மி 11 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நியூஸ் எக்ஸ்

நியூஸ் எக்ஸ்

நியூஸ் எக்ஸ் ஜான் கி பாத் நடத்திய கருத்து கணிப்பில் குஜராத்தில் பாஜக 117-140 இடங்களை பெற்று வெல்லும். காங்கிரஸ் 34-51இடங்களை வெல்லும். ஆம் ஆத்மி 6- 13 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. டைம்ஸ் நவ் - இடிஜி நடத்திய கருத்து கணிப்பில் குஜராத்தில் பாஜக 131 இடங்களை பெற்று வெல்லும். காங்கிரஸ் 41 இடங்களை வெல்லும். ஆம் ஆத்மி 6 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜீ - பார்க் நடத்திய கருத்து கணிப்பில் குஜராத்தில் பாஜக 110-125 இடங்களை பெற்று வெல்லும். காங்கிரஸ் 45-60 இடங்களை வெல்லும். ஆம் ஆத்மி 1-5 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை வெளியான அனைத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் குஜராத்தில் பாஜக மாபெரும் வெற்றியை பெறும், கடந்த முறை வென்ற 99 இடங்களை விட கூடுதலாக 30-40 இடங்களை வெல்லும் என்று கணித்து உள்ளது.

English summary
Gujarat election 2022 exit poll results: Overall comparison between all polls done by various channels .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X