தண்ணீர் பஞ்சம் மட்டுமல்ல... மின்வெட்டாலும் இருளில் மூழ்க காத்திருக்கும் வளர்ச்சி குஜராத்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சொட்டு தண்ணீர் இல்லாமல் வறண்டு போகப் போகுதாம் பெங்களூரு- வீடியோ

  அகமதாபாத்: தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் படுமோசமான மின்வெட்டையும் எதிர்கொள்ளப் போகிறதாம் 'இந்தியாவின்' முன்மாதிரி மாநிலமாக பிரசாரம் செய்யப்பட்ட குஜராத்.

  குஜராத்தை பாருங்கள்.. எப்படி வளர்ச்சி அடைந்துள்ளது..அதேபோல் ஒட்டுமொத்த இந்தியாவையும் வளம் பெற வைப்போம் என்பதுதான் 2014 லோக்சபா தேர்தலில் பாஜக முன்வைத்த பிரசாரம். ஆனால் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

  குடிநீருக்காக அலைமோதும் மக்கள்

  குடிநீருக்காக அலைமோதும் மக்கள்

  தற்போது குஜராத் மாநிலமே படுபயங்கரமான தண்ணீர் பஞ்சத்தால் அல்லோகலப்பட்டு வருகிறது. குடிநீருக்காக பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  கடைசி சொட்டு நீரையும் உறிஞ்சி...

  கடைசி சொட்டு நீரையும் உறிஞ்சி...

  இதன் உச்சகட்டமாக நர்மதை அணையின் கடைசி சொட்டு நீரையும் உறிஞ்சுகிறது குஜராத் அரசு. இப்படி தண்ணீர் பற்றாக்குறையால் பேரவலத்தை எதிர்கொண்டிருக்கும் குஜராத், படுமோசமான மின்வெட்டையும் எதிர்கொள்ள இருக்கிறதாம்.

  மின்வெட்டு பேரவலம்

  மின்வெட்டு பேரவலம்

  குஜராத்தில் அண்மையில் 8,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மற்றும் எரிவாயு மின் நிலையங்கள் மூடப்பட்டன. தண்ணீர் இல்லாததால் அணைகள் மூடப்பட்டுவிட்டன. கைவசம் இருக்கும் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியானது கோடைகாலத்தில் கை கொடுக்க வாய்ப்பே இல்லை.

  பேரழிவில் ஜவுளித்துறை

  பேரழிவில் ஜவுளித்துறை

  இதனால் குஜராத்தின் பிரதானமான ஜவுளித்துறை பேரழிவை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளதாம். வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை பெறுவது குறித்து குஜராத் அரசு தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  After the water scarcity, Gujarat State will face power crisis also.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற