For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எத்தனை அதிருப்தி இருந்தாலும், மோடி அலையால் குஜராத்தில் பாஜக வெற்றி: இந்தியா டுடே சர்வே

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஆக்சிஸ்-மை இந்தியா இணைந்து இந்தியா டுடேவுக்காக இணைந்து நடத்திய சர்வேயில், குஜராத் சட்டசபை தேர்தலில். மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 115-125 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணி 57 முதல் 65 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக அந்தகருத்து கணிப்பு தெரிவிக்கிறது. ஹர்திக் பட்டேல் ஒருவேளை காங்கிரசுக்கு ஆதரவு அளித்தால் கூடுதலாக 7 இடங்களை வேண்டுமானால் வெல்ல வாய்ப்புள்ளதாம்.

Gujarat Opinion Poll: Modi is challenge for Congress alliance

பாஜகவின் வாக்கு 48 சதவீதமாக இருக்கும், காங்கிரசுக்கு 38 முதல் 40 சதவீதமாக இருக்கும் என்று சர்வே கூறுகிறது.

ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டதால் நன்மை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, 38 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரம், பண மதிப்பிழப்பால் பலன் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு 44 சதவீதம் பேர் ஆம் என்றும், 53 சதவீதம் பேர் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி அலை குஜராத்தில் இன்னும் வீசுகிறது. மோடி பிரதமராக இருப்பதால்தான் குஜராத் பலன் பெற்றுள்ளதாக 66 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். குஜராத் மாநில அரசின் செயல்பாட்டில் திருப்தியடைந்துள்ளதாக 38 சதவீதம் பேர்தான் கூரியுள்ளனர். இதன் மூலம் பல விஷயங்களில் மக்கள் அதிருப்தி அடைந்திருந்தாலும், மோடி அலை பாஜக வெற்றிக்கு காரணமாகப்போவது தெளிவாகிறது.

English summary
Asked on whether they were satisfied with Goods and Services Tax (GST), 51 per cent respondents replied in negative with only 38 per cent backing it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X