இஸ்லாமை தழுவியதாலேயே சுதந்திரம் கிடைத்துள்ளது... ஹாதியா நெகிழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஹாதியாவின் திருமணம் செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு- வீடியோ

  கோழிக்கோடு: ஹாதியா, ஷஃபீன் ஜஹான் திருமணம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில் முதன் முறையாக ஹாதியா தனது கணவருடன் இன்று கேரளா வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்லாமை தழுவியதாலேயே தனக்கு சுதந்திரமும்,சராசரி குடிமகனுக்கு கிடைக்க வேண்டிய உரிமையும் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

  ஹாதியாவும் அவரது கணவர் ஷஃபீன் ஜஹானும் இன்று சேலத்தில் இருந்து கோழிக்கோடு வந்தனர். அங்கு இந்திய பாபுலர் முன்னணி அலுவலகத்தில் வைத்து ஹாதியா செய்தியாளர்களை சந்தித்தார்.

  அப்போது அவர் உச்சநீதிமன்றம் எங்களது திருமணத்தை ஏற்றுள்ளது. இப்போது எங்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக நாங்கள் உணர்கிறோம்.
  இஸ்லாமை தழுவியதால்
  சுதந்திரம் கிடைத்துள்ளது

  அரசியலமைப்பு ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்ற உரிமையை எனக்கு அளித்துள்ளது. இது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை மேலும் நான் இஸ்லாமைத் தழுவியதாலேயே எனக்கு இந்த உரிமை கிடைத்துள்ளது என்றும் ஹாதியா தெரிவித்தார்.

  தந்தை வழக்கு

  தந்தை வழக்கு

  24 வயது அகிலா அசோகன் இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னுடைய பெயரை ஹாதியா என வைத்துக் கொண்டார். பின்னர் ஷஃபீன் ஜஹான் என்ற முஸ்லீமை திருமணம் செய்து கொண்டார். தனது மகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததோடு தீவிரவாத அமைப்புடன் இணைக்க சதி செய்துள்ளதாக ஹாதியாவின் தந்தை புகார் தெரிவித்தார்.

  தந்தை வழக்கு

  தந்தை வழக்கு

  24 வயது அகிலா அசோகன் இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னுடைய பெயரை ஹாதியா என வைத்துக் கொண்டார். பின்னர் ஷஃபீன் ஜஹான் என்ற முஸ்லீமை திருமணம் செய்து கொண்டார். தனது மகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததோடு தீவிரவாத அமைப்புடன் இணைக்க சதி செய்துள்ளதாக ஹாதியாவின் தந்தை புகார் தெரிவித்தார்.

  மகிழ்ச்சியாக இருக்கும் ஹாதியா

  மகிழ்ச்சியாக இருக்கும் ஹாதியா

  சோதனையான காலகட்டங்களில் பிற இஸ்லாமிய அமைப்புகளும் தங்களுக்கு உதவ முன் வராத நிலையில் இந்திய பாபுலர் முன்னணி அமைப்பு தங்களுக்கு உதவி செய்ததற்காக ஹாதியா நன்றி தெரிவித்தார். கேரளாவில் மேலும் 3 நாட்கள் தங்கும் ஹாதியா பின்னர் சேலத்தில் தன்னுடைய படிப்பை தொடர்வதற்காக திரும்ப உள்ளார்.

  உச்சநீதிமன்ற தீர்ப்பால் நிம்மதி

  உச்சநீதிமன்ற தீர்ப்பால் நிம்மதி

  கடந்த மார்ச் 8ம் தேதி உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதிகள் அமர்வு சட்டவிதிகளின் படி ஹாதியா தன்னுடைய எதிர்காலத்தை முடிவு செய்வதற்கான முழு அதிகாரம் இருப்பதாக தீர்ப்பு வழங்கியது. எனினும் இந்த மதமாற்ற திருமணத்தில் தீவிரவாத பின்னணி இருக்கிறதா என்பதை தேசிய புலனாய்வு அமைப்பு தொடர்ந்து விசாரணை நடத்தவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Hadiya says the Constitution gives all the freedom to choose their religion, which is a fundamental right of every citizen and all this happened because I embraced Islam

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற