For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐந்து பெண் குழந்தைகள் பெற்றதால் கணவன் கொடுமை – மனைவி தீக்குளித்து தற்கொலை

Google Oneindia Tamil News

புலந்த்ஷர்: உத்தரபிரதேச மாநிலத்தில் 5 பெண் குழந்தைகளுக்கு தாயானதால் சித்திரவதைக்கு உள்ளான பெண்மணி தனது உயிரையே மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளய்து.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேந்த இளம்பெண் பலியான மம்தா. இவர் மோனு என்பவரை 2008 ஆம் ஆண்டில் மணம் புரிந்து கொண்டார். திருமணத்திற்குப் பின் ஹரியான மாநிலத்தில் வசித்து வந்தார். அந்நிலையில் முதல் குழந்தையே பெண்ணாகப் பிறந்த காரணத்தினால் கணவன் வீட்டாரின் கொடுமை ஆரம்பித்தது.

இந்நிலையில் 5 பெண் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக தாயானார் மம்தா. மறுபடியும் கருவுற்ற மம்தாவை கொடுமைக்கு உள்ளாக்கிய கணவன், கடந்த 14 ஆம் தேதி அவரது தாய் வீட்டிலேயே கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

இதனால் மனமுடைந்து தன் சகோதரர் மகேந்திர சிங்கின் வீட்டிற்குச் சென்றவர் 20 ஆம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து போலீசார்ர் விசாரித்து வருகின்றனர். பெண் குழந்தை பெற்றார் என்ற காரணத்திற்காக கொடுமைக்கு உள்ளாகிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
An eight-month pregnant woman set herself afire over alleged harassment by her husband and in-laws over giving birth to five daughters, police said. The incident took place on June 20 when the victim, perturbed over harrasment for six years by her husband and in-laws for giving birth to five daughters, committed suicide by immolating herself, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X