For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலாத்காரம் செய்வதாக மிரட்டுறாங்க.. கதறும் முகமது ஷமி மனைவி.. பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹசின் ஜஹானின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் நகர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான். சில வருடங்களாகவே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஷமி பற்றி அடுக்கடுக்காக புகார்களை கூறினார் ஹசின்.

இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவருமே பிரிந்து வாழ்ந்து வருகிறார். சமீபத்தில், அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பூமி பூஜைக்காக அனைத்து ஹிந்துக்களுக்கும் என் வாழ்த்துக்கள் என்று சமூக வலைத்தளத்தில் ஹசின் ஜகான் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அவரின் இந்த பதிவிற்கு தொடர்ந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கொலை செய்து விடுவோம், பாலியல் பலாத்காரம் செய்வோம் என்றும் மோசமான முறையில் அவருக்கு மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கொல்கத்தா காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி ஆகஸ்ட் 9ம் தேதி ஹசின் ஜகான் புகார் அளித்தார்.

யார் யாருடைய கூண்டுக்கிளி? அக். 5 க்கு பின் தெரியும்- ஸ்டாலின் மீது 'பதவி பறிபோன' ஹெச். ராஜா காண்டு யார் யாருடைய கூண்டுக்கிளி? அக். 5 க்கு பின் தெரியும்- ஸ்டாலின் மீது 'பதவி பறிபோன' ஹெச். ராஜா காண்டு

எதிர்காலம்

எதிர்காலம்

இருப்பினும் பாதுகாப்பு இல்லை என கூறி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடினார். தனது மனுவில் அவர் கூறுகையில், இந்து சகோதர, சகோதரிகளை வாழ்த்தியதற்காக சிலர் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். என்னால், எதுவும் செய்ய முடியாத நிலையில், என் மகள்களின் எதிர்காலத்தை எண்ணி கவலையில் இருக்கிறேன்.

தாக்குதல்கள்

தாக்குதல்கள்

சமூக வலைதளங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறேன். பாதுகாப்பற்ற நிலையில் தான் இருப்பதாக உணர்கிறேன். இது தொடர்ந்தால் மனதளவில் அழுத்தத்துக்கு ஆளாகிவிடுவேன். என் மகள்களுடன் தனியாக வாழ்கிறேன். பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில், ஒவ்வொரு நொடியும் எனக்கு கெட்ட கனவாக உள்ளது. எனவே நீதிமன்றம் விரைந்து எனது பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது.

பாதுகாப்பு வழங்க உத்தரவு

பாதுகாப்பு வழங்க உத்தரவு

இந்த வழக்கு இன்று நீதிபதி டெபாங்சு பாசக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையினர் புகாரை எஃப்.ஐ.ஆராக பதிவு செய்துள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமிதேஷ் பானர்ஜி தெரிவித்தார். இரு தரப்பினரையும் விசாரித்த பின்னர், நீதிபதி டெபாங்சு பாசக் தனது உத்தரவில், மனுதாரருக்கு அவரது வாழ்க்கைக்கும், சொத்துகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.

ஐபிஎல் அணி

ஐபிஎல் அணி

மனுதாரர் அளித்த, புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த விவகாரம் நான்கு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வரும், அப்போது காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷமி தற்போது, ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Calcutta High Court has directed the city police to ensure the safety of Hasin Jahan, the estranged wife of cricketer Mohammed Shami, after she alleged that some people were threatening her in connection with social media posts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X