For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராதே மா மீது பாலியல் குற்றச்சாட்டு... விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

Google Oneindia Tamil News

மும்பை : பெண் சாமியார் ராதே மா, மதத்தின் பெயரில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக அளிக்கப்பட்ட புகார் பற்றிய விசாரணையின் விரிவான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என மாநகர போலீசாருக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகாத செயலில் ஈடுபட்ட ராதே மாக்கு எதிராக வழக்கறிஞர் பல்குனி பிரம்பட் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கு குறித்த விசாரணையை நீதிபதிகள் எஸ்.வி.எம். கனடே மற்றும் ஷாலினி பன்சால்கர்-ஜோஷி ஆகியோர் மேற்கொண்டனர். அப்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என இன்று அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த போலீசார் கூறியுள்ளனர்.

Radhe Maa

வழக்கறிஞர் பிரம்பட், எனினும், தனது தரப்பில் கூறும்போது, போலீசாருக்கு கூடுதல் தகவல்களை அளித்துள்ளேன். ஆனால் அதன்படி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை . ராதே மாவால் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வசீகரிக்கப்படுகின்றனர். ஆசீர்வாதம் பெறுகிறீர்கள் என்று கூறி விட்டு அவர்கள் உடல் உறவு வைத்து கொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என கூறியுள்ளார்.

ராதே மா நடத்தி வரும் தொண்டு நிறுவனமும் பதிவு செய்யப்படவில்லை என அவர் அறிக்கையை அளித்துள்ளார். கோடிக்கணக்கான பணம் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதன்பின், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான ஆவணங்களை இரு வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
The Bombay High Court on Monday asked the city police to file a detailed affidavit on its investigation into a complaint alleging that self-styled godwoman Radhe Maa is running a sex racket
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X