For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எடியூரப்பா கைவிரித்ததால், குமாரசாமியை ஆட்சியமைக்க அழைப்புவிடுத்தார் ஆளுநர்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள முடியாமல் முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில், ஆட்சியமைக்க 117 எம்எல்ஏக்கள் பலம் இருப்பதாக தெரிவித்திருந்த மஜத மாநில தலைவர் குமாரசாமியை ஆளுநர் அழைத்து ஆட்சியமைக்க கேட்டுக்கொண்டார்.

மஜத 38 தொகுதிகளில் வென்ற நிலையில், 78 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் மஜதவின் தலைவர் குமாரசாமி முதல்வராக ஆதரவு கரம் நீட்டியுள்ளது.

HD Kumaraswamy to meet governor

இருப்பினும் 104 தொகுதிகளை வென்ற பாஜகவை முதலில் ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர். இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, போதிய ஆதரவு இல்லை என அறிந்து கொண்ட எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்னெடுக்காமல் வாபஸ் பெற்றுக்கொண்டதோடு, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தத்தை அளித்திருந்த குமாரசாமியை ஆளுநர் வஜூபாய் வாலாவை அழைத்தார். ராஜ்பவனில் ஆளுநரை இரவு 7.20 மணியளவில், சந்தித்தார். அவரை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தார். இதையடுத்து திங்கள்கிழமை பதவியேற்பதாகவும், விரைவில் பெரும்பான்மையை நிரூபித்துக்காண்பிப்பதாகவும் கூறியுள்ளார் குமாரசாமி.

English summary
HD Kumaraswamy to meet governor Vajubhai Vala at 7.30 pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X