For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்பெஷல் கிளாஸ் எடுக்க மறுப்பு.. கணக்கு ஆசிரியை தலைமுடியை இழுத்து அடித்த ஹெட்மாஸ்டர்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

கொல்கத்தா: சிறப்பு வகுப்புகள் எடுக்க மறுத்த கணக்கு டீச்சரை அடித்து, கூந்தலை பிடித்து இழுத்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடந்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் பரகனாஸ் மாவட்டத்திலுள்ளது கோல்பெரியா ஸ்ரீகிருஷ்ணா நகர் ஹைஸ்கூல். இதன் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் அசோக் நஸ்கர். இவர் மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஆசிரியர்கள் படிப்பு சொல்லி தர வேண்டும் என்பதற்காக எக்ஸ்ட்ரா வகுப்புகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Headmaster assaults woman teacher, detained

தலைமை ஆசிரியர் உத்தரவை கணித டீச்சர் சாஸ்வதி குன்டு ஏற்கவில்லை. ஸ்பெஷல் கிளாஸ் எடுக்க முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் அசோக்கி்கும், சாஸ்வதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சாஸ்வதியை கன்னத்தில் அசோக் ஓங்கி அடித்ததாகவும், தலைமுடியை பிடித்து இழுத்து அடித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், சாஸ்வதியின் செல்போனை பறித்து அசோக் வீசியதாகவும், இதில் செல்போன் உடைந்துவிட்டதாகவும் தெரிகிறது. இதுபற்றி தகவல் வெளியானதும் மாணவர்கள், பள்ளிக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த போலீசார், அசோக் நஸ்கரை கைது செய்தனர்.

English summary
A headmaster allegedly slapped and pulled the hair of a woman teacher inside the staff room of a school at Joynagar in West Bengal's South 24 Parganas district today leading the police detaining him. The trouble between the headmaster of Goalberia Srikrishna Nagar High School, Ashok Naskar and mathematics teacher Saswati Kundu began over taking of extra classes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X