For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நக்மா, ஹேமமாலினி படங்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப தடை

By Siva
|

லக்னோ: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நடிகைகள் ஹேமமாலினி, ஜெயபிரதா, நக்மா, ஸ்மிரிதி இரானி மற்றும் நடிகர் ஜாவித் ஜாப்ரி ஆகியோரின் படங்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகைகள் ஹேமமாலினி, ஜெயபிரதா, நக்மா, ஸ்மிரிதி இரானி மற்றும் நகைச்சுவை நடிகர்கள் ஜாவித் ஜாப்ரி, ராஜ் பாபர் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

அவர்களின் படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது அவர்களுக்கு நன்மையாகிவிடும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

படங்கள்

படங்கள்

நடிகர், நடிகைகளின் படங்களை பார்க்கும் வாக்காளர்கள் அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு உள்ளது என்று தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

தடை

தடை

புகார்கள் வந்ததை அடுத்து அந்த 6 நட்சத்திரங்களின் படங்களையும் தேசிய தொலைக்காட்சி சேனலான தூர்தர்ஷனில் ஒளிபரப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நக்மா

நக்மா

ராஜ் பாபர்(காங்கிரஸ்), நக்மா(காங்கிரஸ்) மற்றும் ஜெயபிரதா(ராஷ்ட்ரிய லோக் தள்) ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்துவிட்டது.

ஹேமமாலினி

ஹேமமாலினி

ஹேமமாலினி(பாஜக), ஜாவித் ஜாப்ரி(ஆம் ஆத்மி கட்சி) மற்றும் ஸ்மிரிதி இரானி(பாஜக) ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் இன்னும் வாக்குப்பதிவு நடக்கவில்லை.

English summary
Films of stars Hema Malini, Jaya Prada, Nagma, Smriti Irani and Jaaved Jaaferi, who are all contesting Lok Sabha election, have been banned from being telecast on the national television channel Doordarshan, officials said Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X