For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பறிகொடுக்கிறதா பாஜக? தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு? ஷாக் தந்த சர்வே!

Google Oneindia Tamil News

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை பறிகொடுக்கக் கூடும்; அம்மாநிலத்தில் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்பு உள்ளதாக சிவோட்டர்- ஏபிபி கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

68 எம்.எல்.ஏக்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நாளை மறுநாள் (நவம்பர் 12) தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 1 மாதம் கழித்து டிசம்பர் 8-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பயமா குமாரு? குஜராத்தில் பாஜக மாஜி முதல்வர், மாஜி துணை முதல்வர் ஜூட்- தேர்தலில் போட்டியிட மறுப்பு! பயமா குமாரு? குஜராத்தில் பாஜக மாஜி முதல்வர், மாஜி துணை முதல்வர் ஜூட்- தேர்தலில் போட்டியிட மறுப்பு!

பெரும்பான்மைக்கு தேவை 35 இடங்கள்

பெரும்பான்மைக்கு தேவை 35 இடங்கள்

இமாச்சல பிரதேசத்தைப் பொறுத்தவரையில் ஆளும் பாஜக, ஆட்சியை தக்க வைக்க பகீரத பிரயத்தனம் செய்கிறது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியோ எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என நம்பிககியோடு இருக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு தேவை 35 இடங்கள்.

இதுதான் சரித்திரம்

இதுதான் சரித்திரம்

இமாச்சல பிரதேச வரலாற்றில் பொதுவாக, எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்தது இல்லை. இதுவும் குஜராத்தில் காங்கிரஸுக்கு ஒரு நம்பிக்கையாக உள்ளது. அதேபோல் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளும் காங்கிரஸுக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கிறது.

தொங்கு சட்டசபையா?

தொங்கு சட்டசபையா?

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பாக சிவோட்டர்- ஏபிபி வெளியிட்ட கருத்து கணிப்பு: ஆளும் பாஜகவானது 31 முதல் 39 இடங்களைப் பெறக் கூடும். அதேபோல் காங்கிரஸ் கட்சியும் 29 முதல் 37 இடங்களைப் பெறலாம் என்கிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கலாமாம்.. அதாவது பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் பெரும்பான்மைக்கான இடங்களுக்கு மிக அருகில் செல்லலாம்; அல்லது பெரும்பான்மையைப் பெற முடியாமல் தொங்கு சட்டசபையை எதிர்கொள்ளவும் நேரிடலாம் என்கிறது இக்கருத்து கணிப்பு.

பாஜக வாக்கு சதவீதம் சரியும்?

பாஜக வாக்கு சதவீதம் சரியும்?

அதேநேரத்தில் வாக்கு சதவீதம் என்பது பாஜகவுக்கு கடும் பின்னடைவாக இருக்கும் என்கிறது இந்த கருத்து கணிப்பு. 2017-ம் ஆண்டு பாஜக மொத்தம் 48.8% வாக்குகளைப் பெற்றது. ஆனால் இம்முறை பாஜகவுக்கு 44.8% வாக்குகள்தான் கிடைக்குமா; காங்கிரஸ் கட்சியானது 2017-ல் 41.7% வாக்குகளைப் பெற்றிருந்தது. இம்முறை அதைவிட கூடுதலாக 44.2% வாக்குகளைப் பெறுமாம். ஆம் ஆத்மி கட்சியான குறைந்தது 3.3% வாக்குகளைப் பெறக் கூடும். வாக்குப் பதிவு நெருங்கிவிட்ட நிலையில் இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பாஜகவை பதற வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

English summary
ABP-C Voter Predicts may Hung Assembly in the Himachal Pradesh Assembly Election 2022.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X