For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கோட்சே" பெயரில் கல்வி நிறுவனம், நூலகம்.. தொடங்கியது இந்து மகாசபை.. ம.பியில் அதிர்ச்சி..!

நாதுராம் கோட்சே பெயரில் கல்வி மையம் துவங்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

போபால்: மகாத்மா காந்தியை சுட்டு படுகொலை செய்த கோட்சே பெயரில் ஒரு கல்வி மையம் ஒன்றைத் தொடங்கியுள்ளது இந்து மகாசபா அமைப்பு.. மத்திய பிரதேசத்தில் இதனை ஆரம்பித்துள்ளது!

மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் நாதுராம் கோட்சே பெயரில் கல்வி மையம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதிலேயே லைப்ரரியும் உள்ளது... இதற்கு நாதுராம் கோட்சே ஞானசாலை என்று ஒரு பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

 Hindu Maha sabha opens study centre on Nathuram godse in MP

இது தொடர்பாக இந்து மகாசபா தேசிய துணை தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் தெரிவிக்கும்போது, "இந்திய பிரிவினை குறித்து இளைஞர்களுக்கு கல்வி கற்பித்தல் மற்றும் விழிப்புணர்வை பரப்புதல் என்பதே இந்த கல்வி மையத்தின் அடிப்படை நோக்கமாகும்... இதில் மஹாராணா பிரதாப் போன்ற ஆளுமைகளை பற்றிய புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.

1947-ல் இந்திய பிரிவினைக்கு பிறகு, அதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் என்பதை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமுடியாது... அதனால், இனி வரும் தலைமுறையினருக்கு இந்திய பாகிஸ்தான் பிரிவினை குறித்து முழுமையான வரலாற்றை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.. அந்த வகையில், நாதுராம் கோட்சே ஞானசாலை என்ற கல்வி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய பிரிவினையின் பல்வேறு அம்சங்களை பற்றி இளம் தலைமுறையினருக்கு இது தெரிவிக்கும்... அதற்கான நூலகமாகவும் இந்த மையம் விளங்குகிறது... இங்கு பயிற்றுவிக்கப்படும் கல்வியின் மூலம் குரு கோபிந்த் சிங், சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்து மகாசபா தேசிய துணைத் தலைவர் ஜெயவீர் பரத்வாஜ் போன்ற தேசிய தலைவர்கள் பற்றிய தகவல்களும்பரப்பப்படும்" என்றார்.

English summary
Hindu Maha sabha opens study centre on Nathuram godse in MP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X