For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எழுத்தாளர் கல்பர்கி கொலைக்கான காரணங்கள் என்ன? சிஐடி கையில் பழைய ரெக்கார்டுகள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கன்னட எழுத்தாளர் கல்பர்கியின் மீது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு பகைமை உருவாக சில காரணங்கள் இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கன்னட எழுத்தாளரும், ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான, எம்.எம்.கல்பர்கி நேற்று காலை ஹூப்ளி-தார்வார் நகரிலுள்ள அவரது வீட்டில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.

Hindu organizations accused Kalburgi of hurting the religious sentiments

நாட்டை உலுக்கிய இச்சம்பவம் குறித்து விசாரிக்கும் பொறுப்பை மாநில சிஐடிக்கு முதல்வர் சித்தராமையா ஒப்படைத்துள்ளார்.

போலீசார் விசாரணையில் கல்பர்கி மீது யாருக்கெல்லாம் பகைமை இருக்கலாம் அதற்கான காரணங்கள் என்ன என்று ஒரு பட்டியலை தயாரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்பர்கி தன்னை ஒரு முற்போக்கு எழுத்தாளராகவே முன்னிருத்தி வந்துள்ளார். மாநிலத்திலுள்ள பெரும்பான்மை மதம் மற்றும் ஜாதி பிரிவினரை அவரது எழுத்துக்கள் தொடர்ந்து சீண்டி வந்துள்ளன.

கடந்த ஆண்டு மறைந்த, எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, இந்து கடவுள்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அதை வழிமொழிந்து கல்பர்கியும் மேடையில் பேசுகையில், இந்து கடவுள்கள் சிலைகளின் மீது மூத்திரம் கழிக்கலாம். அதில் தவறு கிடையாது என்றார்.

இந்த பேச்சுக்காக பஜ்ரங்தள் போன்ற சில இந்து அமைப்புகள், கல்பர்கியை கண்டித்து போராட்டங்கள் நடத்தின. மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக கல்பர்கியை கைது செய்ய வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டன.

இது மட்டுமின்றி லிங்காயத்து ஜாதி மக்கள் மகானாக வழங்கும் பசவண்ணர் வாழ்க்கை குறித்தும் கல்பர்கி விமர்சனம் செய்தார். பசவண்ணரின் இரண்டாவது மனைவி அவரோடு வலுக்கட்டாயமாக வாழ வைக்கப்பட்டதாக கருத்து கூறினார். பசவண்ணரின் தங்கையை பற்றியும் கல்பர்கி விமர்சனம் செய்திருந்தார். எனவே லிங்காயத்து ஜாதியினரும் அவர் மீது கோபத்தில் இருந்தனர். இதுபோன்ற கோணங்களிலும், அல்லது வேறு காரணங்கள் ஏதேனும் கொலையின் பின்னணியில் இருக்கலாமா என்ற கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

லிங்காயத்து ஜாதி மக்கள் கர்நாடக மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் போன்ற பல்வேறு முன்னாள் முதல்வர்கள் அந்த ஜாதியை சேர்ந்தவர்கள். அரசியல் மற்றும் சமூக ரீதியாக லிங்காயத்துகள் பலம் பெற்றவர்கள். அவர்கள் மகானாக நினைக்கும் பசவண்ணர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரை தூக்கிவிடும் பணியில் ஈடுபட்டவர் என்று வரலாறு கூறுகிறது. இதனால் புரட்சியாளர் பசவண்ணர் என்றே கர்நாடக மக்களாலும் அவர் அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In June last year, the Vishwa Hindu Parishad and Bajrang Dal in Dakshin Kannada accused Kalburgi of hurting the Hindu sentiments. Kalburgi had supported the late UR Ananthamurthy by saying, at a seminar about Karnataka’s Anti-superstition Bill, that there was nothing wrong in urinating on stone idols.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X