For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடடா "ஷிமோகா முதல்வரா".. அப்ப பதவி அல்பாயுசுதான்.. விடாமல் துரத்தும் சென்டிமென்ட் ராசி!

பெங்களூர்

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பரபரப்பான சூழ்நிலையில் பதவி விலகினார் எடியூரப்பா- வீடியோ

    பெங்களூர்: கர்நாடக அரசியலில் எப்போதும் நடக்கும் வரலாறு ஒன்று மீண்டும் நடந்துள்ளது. கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் இருந்து தேர்தெடுக்கப்படும் முதல்வர்கள் யாருமே, 5 வருடம் அவர்களுடைய ஆட்சியை செய்தது இல்லை. இந்த முறையும் அந்த வரலாறு மீண்டும் நடந்துள்ளது.

    இதுவரை நான்கு முதல்வர்கள் ஷிமோகா தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த முறையும் முதலில் எடியூரப்பா ஷிமோகா தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு முதல்வரானார்.

    ஆனால் வெறும் 56 மணி நேரத்தில் அவர் தன்னுடைய பதவியை இழந்து இருக்கிறார். ஷிமோகா ராசியோ என்னவோ, இப்போது காங்கிரஸ் - மஜத கூட்டணியில் குமாரசாமி முதல்வராக உள்ளார்.

    தொடக்கம்

    தொடக்கம்

    முதலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, கடிடால் மஞ்சப்பா இதே தொகுதியில் இருந்து முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். சரியாக 1956 ஆகஸ்ட் 19ம் தேதி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் அக்டோபர் 31, 1956 வரைதான் முதல்வராக இருந்தார். மொத்தமாக 75 நாட்கள் முதல்வராக இருந்தார்.

    எஸ் பங்காரப்பா ஆட்சி

    எஸ் பங்காரப்பா ஆட்சி

    அதற்கு அடுத்து ஷிமோகா தொகுதியில் இருந்து எஸ் பங்காரப்பா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அவர் சரியாக அக்டோபர் 17ம் தேதி 1990ல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் 1992 நவம்பர் 1992 வரைதான் அவர் முதல்வராக இருந்தார். மொத்தம் 756 நாட்கள்தான் அவர் முதல்வராக இருந்தார். இவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜே எச் பாட்டில் ஆட்சி

    ஜே எச் பாட்டில் ஆட்சி

    அதற்கு அடுத்து அதே ஷிமோகா தொகுதியில் இருந்து ஜே எச் பாட்டில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். மே மாதம் 31ம் தேதி 1996ல் அவர் முதல்வரானார். அவர் அக்டோபர் 17, 1997 வரை மட்டுமே முதல்வராக இருந்தார். சரியாக 1225 நாட்கள் இவர் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவரும் முழுதாக ஐந்து வருடம் ஆளவில்லை.

    எடியூரப்பா ஆட்சி

    எடியூரப்பா ஆட்சி

    அதன்பின் எடியூரப்பா, அதே ஷிமோகா தொகுதியில் இருந்து நவம்பர் 12ம் தேதி 2007 தேர்வு செய்யப்பட்டு நவம்பர் 19, 2007 வரை ஆட்சிசெய்தார். சரியாக 7 நாட்கள் மட்டுமே இவர் ஆட்சி செய்தார். பின் அதே தொகுதியில் இருந்து மே 30ம் தேதி 2008ல் முதல்வராகி நவம்பர் 19, 2011 வரை 1269 நாட்கள் ஆட்சி செய்தார். தற்போது கடைசியாக மே 17ம் தேதி 2018 ஆட்சி அமைத்து மே 19, 2018 என சரியாக 56 மணி நேரம் ஆட்சி செய்துள்ளார். இப்படி தொடர்ந்து ஷிமோகா தொகுதியில் இருந்து தேர்தெடுக்கப்படும் முதல்வர்கள் முழுதாக ஆட்சி செய்ய முடியாமல் போகிறது.

    English summary
    There have been four Chief Ministers that Shivamogga has produced. Ironically none of them have completed their term. This has been a trend with CM candidates from Shivamogga, the home town of B S Yeddyurappa since 1956.This year too the trend continued and B S Yeddyurappa for the third time was unable to complete his term. Let us take a look at the CM candidates that Shivamogga has produced.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X