For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்லாத பழைய ரூ.500, ரூ.1000 வைத்திருந்தால் ரூ. 10000 அபராதம்- லோக்சபாவில் மசோதா தாக்கல்

செல்லாத பழைய ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகளை கையிருப்பில் வைத்திருப்பவர்களுக்கு தண்டனை அளிக்க வகைச் செய்யும் மசோதாவை மத்திய அரசு வெள்ளிக்கிழமை லோக்சபாவில் தாக்கல் செய்தது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: கள்ள நோட்டு, கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்குடன் உயர் மதிப்புடைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக கடந்த நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

இதனையடுத்து சில்லறை நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. வங்கியில் இருந்து பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. புதிய 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Holding more than ten demonetised notes will attract penalty

செல்லாத ரூபாய் நோட்டுகளை 10க்கு மேல் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டத்தை நிரந்தர சட்டமாக மாற்றும் வகையில், லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மசோதா ஒன்றை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாவில், நிதி கட்டமைப்பில் புழக்கத்தில் இருந்த கள்ள ரூபாய் நோட்டுகள், கருப்பு பணம் ஆகியவற்றை ஒழிப்பதற்கு ரிசர்வ் வங்கியின் பரிந்துரையை ஏற்று, உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது என்ற முடிவை மத்திய அரசு எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பிறகு, செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கையிருப்பில் வைத்திருத்தல், புழக்கத்தில் விடுதல், வாங்குதலுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி, படிப்பு போன்றவற்றுக்காக பழைய நோட்டுகளை வைத்திருக்க விரும்புவோர் மட்டும் 25 எண்ணிக்கையில் அத்தகைய நோட்டுகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும், செல்லாத ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகளை பத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் அல்லது அவர்களிடம் இருக்கும் நோட்டுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம், இந்த 2 தொகைகளில் எது அதிகமாக உள்ளதோ, அது அபராதமாக விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
In a bid to eliminate the possibility of running a parallel economy, the government has decided to punish those holding more than 10 demonetised notes. Holding of 10 or more demonetised Rs 500 and 1,000 notes will attract a penalty of Rs 10,000 according to a bill introduced in the Lok Sabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X