For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லேட்டாக வந்த அஸ்வின்.. சாம்சன் செய்த அந்த "தவறு".. சாம்பியன் ஆன குஜராத்! ராஜஸ்தான் வீழ்ந்தது எப்படி?

Google Oneindia Tamil News

காந்தி நகர்: ஐபிஎல் 2022 தொடரின் பைனல் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி சாம்பியன் ஆகி உள்ளது. முதல் சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளது. ஹர்திக் பாண்டியா சிறப்பான கேப்டன்சி மூலம் பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.

விறுவிறுப்பாக சென்ற 2022 ஐபிஎல் தொடர் முடிவிற்கு வந்துள்ளது. ராஜஸ்தான் அணிக்கும் குஜராத் அணிக்கும் இடையிலான பைனல் ஆட்டம் இன்று அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

Recommended Video

    IPL 2022 Final: Rajasthan Royal-ன் Loss-க்கு Reasons | Aanees Appeal | RR vs GT |#Cricket

    இதில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்றாலும் குஜராத்திற்கு எதிராக பேட்டிங் தேர்வு செய்தார். அவர் பேட்டிங் தேர்வு செய்த போதே அது கடும் விமர்சனங்களை சந்தித்தது.

    பெரிய தோனின்னு நினைப்பா? டென்ஷன் ஏற்படுத்திய ராஜஸ்தான் வீரர்.. விளாசும் நெட்டிசன்கள்.. என்ன நடந்தது?பெரிய தோனின்னு நினைப்பா? டென்ஷன் ஏற்படுத்திய ராஜஸ்தான் வீரர்.. விளாசும் நெட்டிசன்கள்.. என்ன நடந்தது?

    பேட்டிங்

    பேட்டிங்

    ஏனென்றால் குஜராத் அணி பொதுவாக இந்த சீசனில் சிறப்பாக சேசிங் செய்தது. இதனால் தொடக்கத்திலேயே குஜராத் அணிக்கு ஆதரவாக ஆட்டம் இருந்தது. முதல் 4 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி நன்றாகத்தான் பேட்டிங் செய்து கொண்டு இருந்தது. ஆனாலும் குஜராத் அணி மிகவும் கட்டுக்கோப்பாக பவுலிங் செய்தது. இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று அதிரடியாக 16 பந்தில் 22 ரன்கள் எடுத்த ஜெய்ஷ்வால் யாஷ் தயால் ஓவரில் அவுட்டான நிலையில் ராஜஸ்தான் அணியின் ரன் ரேட் குறைந்தது.

    சரிவு

    சரிவு

    அதன்பின்தான் ராஜஸ்தான் அணியின் சரிவு தொடங்கியது. அதன்பின் இறங்கிய சஞ்சு சாம்சனும் 11 பந்தில் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் இந்த முறையும் அணியின் பாரம் பட்லர் தலையில் விழுந்தது. ஆனால் அவரும் 35 பந்தில் 39 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் வந்த அஸ்வின் 6, ஹெட்மயர் 7 என்று சொற்ப ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். ரியான் பராகே 15 பந்துகள் பிடித்து வெறும் 15 ரன்கள் மட்டும் எடுத்தார்.

     ராஜஸ்தான்

    ராஜஸ்தான்

    இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 130-9 ரன்கள் மட்டும் எடுத்தது. குஜராத் அணியில் பாண்டியா 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். எளிதான ஸ்கோரை எதிர்கொண்டு களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்கத்திலேயே கில் கேட்ச் கொடுக்க அதை சாஹல் மிஸ் செய்தார். இன்று ராஜஸ்தான் பீல்டரிங் கொஞ்சம் சொதப்பலாகவே இருந்தது. குறைந்த ஸ்கோர் என்பதால் குஜராத் அணி கவலையின்றி மிகவும் பொறுமையாக ஆடியது. கில் சரியாக 100 ஸ்டிரைக் ரேட்டில் ஆடினார்.

    பாண்டியா

    பாண்டியா

    பாண்டியாவும் பதற்றம் இன்றி 30 பந்தில் 34 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவசரப்பட்டு ஆடி விக்கெட்டுகளை கொடுக்காமல் ஆட்டத்தை கடைசிவரை கொண்டு சென்றனர். பாண்டியா, வேட் அவுட்டான பின் மில்லர் - கில் இருவரும் வேகம் காட்ட தொடங்கினர். இதனால் ராஜஸ்தான் கையில் இருந்து ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நழுவியது. முக்கியமாக அஸ்வினுக்கு மிகவும் தாமதமாகவே சஞ்சு சாம்சன் ஓவர் கொடுத்தார்.

    அஸ்வின்

    அஸ்வின்

    அஸ்வினை டெத் ஓவர்கள் வரை சஞ்சு சாம்சன் வைத்து இருந்தார். இதனால் குஜராத் அணிக்கு பெரிதாக பிரஷர் இல்லை. அதன்பின்பு லேட்டாக வந்த அஸ்வினும் விக்கெட் எடுக்க முடியாமல் ரன் கொடுத்தார். குஜராத் அணியில் கடைசி கட்டத்தில் மில்லர் பவுண்டரியாக அடிக்க, 19 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். கில் 45 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் குஜராத் அணி எளிதாக 130 ரன்களை கடந்து ராஜஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

    English summary
    How did Gujarat win the IPL final match against Rajasthan and become champion? ஐபிஎல் 2022 தொடரின் பைனல் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி சாம்பியன் ஆகி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X