For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிஜாமாபாத் தொகுதி வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்.? சைலன்ட் மோடில் தேர்தல் ஆணையம்

Google Oneindia Tamil News

நிஜாமாபாத்: மே 23 அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை இது பற்றி எதுவும் கூறவில்லை என நிஜாமாபாத் மாவட்ட வருவாய் அலுவலர் அஞ்சியா கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மக்களவை தொகுதி தான் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக உள்ளது 185 வேட்பாளர்கள் களத்தில் உள்ள இத்தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் 11ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

How vote counting conduct in Nizamabad Lok Sabha election..Election Commission keep silent

ஆனால் இத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் கிடைக்கவில்லை என தெரிகிறது. 185 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் நிஜாமாபாத் தொகுதியில் நாட்டில் முதல் முறையாக, M3 பதிப்பு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்களிக்க பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில் நிஜாமாபாத் மக்களவை தொகுதியின் இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு, சுமார் 36 மணி நேரம் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அடிப்படையில், 14 முதல் 36 மேஜைகள் வாக்கு எண்ணிக்கைக்காக அமைக்கப்படும் முழு வாக்கு எண்ணிக்கையும் பொதுவாக 8-10 சுற்றுகளில் முடிந்துவிடும்.

ஆனால் நிஜாமாபாத் தொகுதியில் போட்டயிட்டுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, வாக்கு எண்ணிக்கை முடிவடைய மிக நீண்ட நேரம் ஆகும் என்றே தெரிகிறது. இது பற்றி பேசிய நிஜாமாபாத் மாவட்ட வருவாய் அலுவலர் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளுக்காக காத்திருப்பதாக கூறினார்.

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவிலும், அனைத்து வேட்பாளர்களின் வாக்கு விவரங்களும் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். ஆனால் 185 வேட்பாளர்களளுக்கு பதிவான வாக்குகளை சரிபார்க்கும் பணி மிகவும் கடினமானது தான் என குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மேஜையிலும் இருவர் பணியமர்த்தப்பட்டு வாக்கு எண்ணிக்கையை சரி பார்ப்பார்கள் என்றார்.

சாதாரண சூழலில் வேட்பாளர்களுக்கு பதிவான ஓட்டுகளை காட்சிப்படுத்துவதும், பதிவேட்டில் பதிவு செய்வதும் விரைவாக செய்யப்படும். ஆனால் நிஜாமாபாத் தொகுதியில் அது சாத்தியமில்லை என்றார். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளின் படி செயல்பட்டு கூடுதல் பணியாளர்கள் மற்றும் மேஜைகள் அமைக்கப்பட்டால், வாக்குகளை ஓரளவிற்காவது விரைவாக எண்ணி முடிப்பது சாத்தியம் என அதிகாரி அஞ்சியா கூறியுள்ளார்.

English summary
Nizamabad District Revenue Officer Anjaiah has said that she is prepared to vote on May 23, but the Election Commission has not yet said anything about it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X