For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொய்செய்தி.. ரொம்ப பயமாக இருக்கு..ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பற்றி சச்சின் பைலட் பரபர பதிவு

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் பதவி விவகாரத்தில் தற்போதைய முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே பிரச்சனை உள்ளது. இந்நிலையில் தான் சச்சின் பைலட் பரபரப்பான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. தேர்தல் தோல்வி, மூத்த தலைவர்கள் விலகல் உள்ளிட்ட காரணங்களால் காங்கிரஸ் கட்சி மீண்டும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடைப்பயணம் துவங்கி உள்ளார்.

பாருங்க நம்ம மனுஷங்க பண்ண வேலைய.. செவ்வாய் கிரகத்தையும் குப்பையாக்கிட்டாங்க பாஸ்.. 7 ஆயிரம் கிலோவாம் பாருங்க நம்ம மனுஷங்க பண்ண வேலைய.. செவ்வாய் கிரகத்தையும் குப்பையாக்கிட்டாங்க பாஸ்.. 7 ஆயிரம் கிலோவாம்

காங்கிரஸ் தலைவர் பதவி

காங்கிரஸ் தலைவர் பதவி

இதற்கு மத்தியில் தான் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்வதற்கான தேர்தல்அக்டோபர் 17ல் நடைபெற உள்ளது. இதில் தற்போதைய இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டவர்கள் போட்டியிடவில்லை. ராஜஸ்தான் முதல்வராக உள்ள அசோக் கெலாட்டை களமிறக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். அதேபோல் சசீதரூரும் போட்டியிட உள்ளார்.

ராஜஸ்தான் அரசியல் குழப்பம்

ராஜஸ்தான் அரசியல் குழப்பம்

காங்கிரஸ் கட்சியில் தற்போது ஒருநபருக்கு ஒருபதவி என்ற நடைமுறை உள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவராக உள்ள அசோக் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், புதிய முதல்வராக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் தான் சச்சின் பைலட்டை புதிய முதல்வராக்க அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக உள்ள 90 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளதார். இதுதொடர்பாக சபாநாயகர் சிபி ஜோஷியிடம் பேசியுள்ளனர்.

அறிக்கை கேட்ட சோனியா

அறிக்கை கேட்ட சோனியா

இதனால் ராஜஸ்தான் அரசியலில் குழப்பமான சூழல் உள்ளது. அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவி மற்றும் ராஜஸ்தான் முதல்வர் பதவி மீது கண்வைத்து தான் எம்எல்ஏக்களை தூண்டி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ராஜஸ்தான் கட்சி நிலவரம் தொடர்பாக சோனியா காந்தி அறிக்கையை கேட்டுள்ளார்.

பைலட் கூறியதாக பரவிய தகவல்

பைலட் கூறியதாக பரவிய தகவல்

இந்நிலையில் தான் தற்போது ஒரு செய்தி வெளியானது. அதாவது ‛‛சச்சின் பைலட் கட்சி தலைமை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்தால் அவர் ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருக்கக்கூடாது. மேலும் கட்சி எம்எல்ஏக்களை ஒன்றிணைத்து கொண்டு வருவதும் அசோக் கெலாட்டின் பொறுப்பாக இருக்க வேண்டும்'' என சச்சின் பைலட் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

 பொய்யான செய்தி

பொய்யான செய்தி

இதனை தற்போது சச்சின் பைலட் முற்றிலும் மறுத்துள்ளார். அதன்படி இந்த செய்தியை குறிப்பிட்டு சச்சின் பைலட் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், இது பொய்யான செய்தி என்பதை பயத்துடன் தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அசோக் கெலாட்டை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தவில்லை என்பதை சச்சின் பைலட் வலியுறுத்தி உள்ளார்.

English summary
There is a conflict between the current Chief Minister Ashok Khelat and Sachin Pilot over the post of Chief Minister of Rajasthan. In this case, Sachin Pilot has posted a sensational post on his Twitter page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X