காங்கிரசை கைவிட்ட தலித்துகள், பழங்குடியினர்.. அடிப்படை ஓட்டு வங்கியிலேயே ஓட்டை.. கலங்கடிக்கும் குஜராத்
காந்திநகர்: குஜராத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மொத்தமுள்ள 40 தனித்தொகுதிகளில் 2 தொகுதிகளில்தான் காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
நண்பகல் 12 மணி நிலவரப்படி பாஜக 159 தொகுதிகளிலும் காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும் முன்னணியில் இருக்கிறது.

தோல்வி
இது காங்கிரசுக்கு வரலாற்று தோல்வியாகும். அதேபோல இம்மாநில தேர்தலில் இதுவரை எந்த ஒரு கட்சியும் 150 இடங்களில் வெற்றி பெற்றதில்லை. ஆனால் தற்போதைய சூழலில் பாஜக 159 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதே நிலைமை நீடித்தால் 159 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். இது அம்மாநில தேர்தல் வரலாற்றில் புதிய மைல் கல்லாகும். இந்த வெற்றி மூலம் சிபிஎம் சாதனையை பாஜக சமன் செய்திருக்கிறது. அதாவது மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்றிருந்தது. இந்த சாதனையை வேறெந்த அரசியல் கட்சியும் முறியடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது பாஜக இந்த சாதனையை குஜராத்தில் சமன் செய்ய இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் குஜராத்தில் உள்ள தனித் தொகுதிகளில் கடந்த தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் இந்த முறை கடும் தோல்வியை சந்தித்திருக்கிறது.

எத்தனை தொகுதிகள்
கடந்த 2017ம் ஆண்டு தேர்தலை பொறுத்த அளவில் 40 தனித்தொகுதிகளில் காங்கிரஸ் 19 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது.குறிப்பாக சபர்காந்தா, தாஹோத், சூரத் ஆகிய மாவட்டங்கள் காங்கிரசுக்கு அதிக அளவில் கைகொடுத்தன. இம்முறை எல்லாம் தலைகீழாக மாறி இருக்கிறது.மேலே குறிப்பிட்டதை போல 40 தனித்தொகுதிகளில் 13 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோருக்கானது, 27 தொகுதிகள் பழங்குடியினருக்கானது. ஆதிவாசி போன்ற பிரச்சாரங்களை ராகுல் காந்தி முன்னெடுத்தபோதிலும், பழங்குடியினர் பாஜகவிற்குதான் கை கொடுத்துள்ளனர். காங்கிரஸ் இந்த முறை 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. இதில் மற்றொரு ட்விஸ்ட் என்னவெனில் காங்கிரஸ் அளவுக்கு ஆம் ஆத்மியும் 2 தனித்தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது என்பதுதான். மற்றபடி அனைத்து இடங்களிலும் பாஜக முன்னிலையில் இருக்கிறது. ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளர் முன்னணியில் இருக்கிறார். 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜக 16 இடங்களை வென்றிருந்தது. அதற்கு முன்னர் நடைபெற்ற 2012ம் ஆண்டு தேர்தலில் பாஜக 20 தனித்தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

கைகொடுத்த போராட்டங்கள்
இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களிலும் காங்கிரஸ் பாதி பாஜக பாதி இடங்கள் என்றுதான் வெற்றி பெற்றிருந்தது. குறிப்பாக காங்கிரசுக்கு இந்த தனி தொகுதிகள் பெரிய அளவில் கைகொடுத்தன. ஆக ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் இந்த தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்திருக்கிறது. கடந்த 2017க்கு முன்னர் நடைபெற்ற படிதார் சமூக மக்கள் போராட்டம், தலித் மக்களின் போராட்டம் உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சிக்கு கைகொடுத்தது. இதனால் காங்கிரசுக்கு 41.44% வாக்குகள் கிடைத்திருந்தன. பாஜக 49.05% வாக்குகளை பெற்றிருந்தது. எனவே இந்த முறை காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று புதிய யுத்திகளை கையாண்டிருந்தது. பாஜகவை போல பெரிய தலைவர்களை கட்சி நம்பாமல் உள்ளூர் தலைவர்களை கொண்டு வீடு வீடாக பிசாரத்தை மேற்கொண்டது.

ஆம் ஆத்மி
ஆனால் இந்த யுக்தி படுதோல்வியில் முடிவடைந்துள்ளது. அதேபோல 2017ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்த ஆம் ஆத்மி இந்த முறை 5 தொகுதிகளில் முன்னிலைக்கு வந்திருக்கிறது. ஆம் ஆத்மியை பொறுத்த அளவில், காங்கிரஸின் வாக்கு வங்கியை உடைக்கவே இக்கட்சி களம் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. சிறுபான்மையினர் மற்றும் தனி தொகுதிகளில் காங்கிரசுக்கு இருந்த செல்வாக்கை ஆம் ஆத்மி இம்முறை உடைத்திருப்பது தெளிவாக தெரிகிறது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications