கலக்கும் நவீன் பட்நாயக்.. நெல் கொள்முதலில் சாதித்த மகளிர் சுய உதவிக்குழுக்கள்.. முன்னுதாரணமான ஒடிசா
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் மாநில அரசின் ‛மிஷன் சக்தி' திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்கள் மூலம் 4 ஆண்டுகளில் 187.89 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து ரூ.58.69 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக ஒடிசா அரசும், அங்குள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களும் மாறியுள்ளன.
ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக நவீன் பட்நாயக் உள்ளார். மாநிலத்தில் பெண்கள் உள்பட அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். ஒடிசாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை மகளிர் சுய உதவிக்குழுவினர் ஊறுகாய், தையல், கைவினை பொருட்கள் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர். அதை தாண்டி அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை.

நெல் கொள்முதல் திட்டம்
இந்நிலையில் 2019 மே 29ல் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான மாநில அமைச்சரவை அடுத்த 5 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ரூ.5,000 கோடி மதிப்பிலான நெல் கொள்முதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம் என்பது மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் தங்கள் நிலத்தில் நெல் பயிரிட்டு அறுவடை செய்வது தான் நோக்கமாகும்.

நெல் கொள்முதல் வெற்றி
அதன்படி 2018-19 ராபி பருவத்தில் களஹண்டியின் 17 பஞ்சாயத்துகளில் 17 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் நெல் கொள்முதல் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 24.71 லட்சம் குவிண்டால் நெல் கிடைத்தது. இந்த நெல் ரூ.43.26 கோடிக்கு விற்பனை செய்ப்பட்டது. இதன்மூலம் ரூ.77.25 லட்சம் கமிஷனாகவும், ஒரு குழுவிற்கு சராசரியாக ரூ.4.5 லட்சமும் கிடைத்தது. இந்த வெற்றியால் திட்டம் தொடர்ந்தது. சாகுபடியை அதிகரிக்க திட்டமிடப்பட்டது.

4 ஆண்டுகளில் ரூ.58.69 கோடி
அதன்படி 11 மாவட்டங்களில் 199 குழுக்கள் 2019-20 காரீப் பருவ கொள்முதலில் இறக்கப்பட்டது. இதில் ரூ.419 கோடி மதிப்பிலான 23.07 லட்சம் குவிண்டால் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.7.2 கோடி கமிஷன் கிடைத்தது. 2021-22 காரீப் காலத்தில் 20 மாவட்டங்களில் 562 மகளிர் சுய உதவிக்குழுவினர் நெல் கொள்முதலில் ஈடுபட்டன. 74.85 லட்சம் குவிண்டால் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் உறுப்பினர்கள் ரூ.23.39 கோடிக்கு கமிஷன் பெற்றனர். மகளிர் குழுக்கள் கடந்த 4 ஆண்டுகளில் 187.89 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து ரூ.58.69 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

முதல் வெற்றி பெற்ற குழு
இந்த திட்டம்மூலம் சோனேபூர் மாவட்டம் பினிகாவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட ஜெய் மா துளசி மகளிர் சுய உதவிக் குழு 2020 மார்ச் 5ல் முதல் முறையாக வங்கி கணக்கில் ரூ. 5.29 லட்சத்தை பெற்றது. ஒரு சுய உதவிக்குழு லட்சக்கணக்கில் சம்பாதித்தது என்பது இதுவே முதல் முறையாகும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, காரீப் பருவத்தில் நெல் கொள்முதல் மூலம் ரூ.11.24 லட்சம் சம்பாதித்தது. ராபி பருவத்தில் ரூ.24.32 லட்சம் கமிஷன் பெற்று மாநில அளவில் சுய உதவிக்குழு முதலிடம் பிடித்தது.

வங்கி கணக்கில் வரவு
மகளிர் சுய உதவிக்குழுக்களின் இத்தகைய வெற்றி காரணமாக தானியங்கு முறையில் பதிவு துவங்கிய நிலையில் தற்போது பயோ-மெட்ரிக் ஐரிஸ் ஸ்கேனர் மூலம் அடையாளம் காணுதல் வரை மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி பெற்ற சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கொள்முதல் செய்யும்போது தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்து வருகிறது. ஒடிசா மாநில பொது வினியோக வாரியத்திடம் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவாதல் பெண்கள் அலைய வேண்டியது இல்லை. இங்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.31.25 ரூபாய் கமிஷனாக வழங்கப்படுகிறது.

பெண்கள் வாழ்வாதாரம் மேம்பாடு
ஒரு காலத்தில் ஆண்களின் வருமானங்களை மட்டும் சார்ந்திருந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தற்போது விவசாயத்தில் ஈடுபட்டு வளர்ச்சி அடைந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து மேம்பாடு அடைந்து வருகிறது. இதுதவிர பிற வகைகளிலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு உதவி செய்யப்படுகிறது. மேலும் செங்கல் தயாரிப்பு, கட்டிட பணிகள் மேற்கொள்ளுதல் ஆகியவையும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மிஷன் சக்தி துறை உருவாக்கம்
ஒடிசாவில் 2001ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஒடிசாவில் பெண்களின் அதிகாரத்தை அடைவதற்கான முக்கிய உத்தியாக, 'மிஷன் சக்தி' திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டது. 2 ஆண்டுகளில் 2 லட்சம் குழுக்களை உருவாக்கும் நோக்கம் இருந்தது. 2006-2007ல் 2,48,689 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு மார்ச் 2017க்குள் 3,14,646 ஆக உயர்ந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக 2,87,367 சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இப்போது மிஷன் சக்தி 70,00,010 பெண்களை உள்ளடக்கிய 6,02,013 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் பெண்கள் மூலம் மாநிலத்தில் புரட்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண்களின் ஆர்வமான செயல்பாட்டால் ஒடிசா அரசு மிஷன் சக்தியை தனித்துறையாக அங்கீகரித்து அனைத்து சுய உதவிக்குழுக்களின் செயல்பாட்டையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துள்ளது.

ரூ.880 கோடி பரிவர்த்தனைகள்
15 துறைகளுடன் ஒன்றிணைந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,200 கோடி மதிப்பிலான வணிகத்தை வழங்குவதில் மிஷன் சக்தி துறை கணிசமாக முன்னேற்றமடைந்துள்ளது. இதன் மூலம் ரூ. 300 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் வேலையிழந்த சமயத்திலும் கூட மகளிர் சுய உதவிக்குழுக்கள் திறமையாக செயல்பட்டன. இதன்மூலம் பல குடும்பங்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளன. மேலும் வங்கி வசதி இல்லாத பஞ்சாயத்துகளில் மாநில அரசு சார்பில் சுய உதவிக்குழு உறுப்பினர்களை வணிக முகவர்களாக பயன்படுத்தி வருகிறது. 2,203 உறுப்பினர்கள் வணிக முகவர்களாக உள்ளனர். இவர்கள் மூலம் ரூ.880.84 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேசியம், சர்வதேச அளவில்...
இதுபற்றி மிஷன் சக்தி துறை கமிஷனரும், செயலாளருமான சுஜாதா ஆர் கார்த்திகேயன் கூறுகையில்,‛‛தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டத்தால் பெண்கள் முன்னேற்றமடைந்து வருகின்றனர். வறுமையை உடைத்து நெல் கொள்முதல் உள்பட சுகாதார வளாகங்கள் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது இன்னும் விரிவுப்படுத்தப்படும். மகளிர் சுய உதவிக்குழவினரின் பொருட்களை விற்பனை செய்ய வசதியாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் சில நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். இதன்மூலம் அவர்கள் நல்ல விலையை பெற முடியும்'' என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications