”கை” கட்சிக்கு தாவிய “தாமரை” கட்சிக்காரர் - அடுத்தடுத்த தாவல்களால் அதிர்ந்த பாஜக தலைமை
டேராடூன் : உத்தரகாண்டில் பாஜக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஹரக் சிங் ராவத் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது , பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
சட்டசபை பதவி காலம் நிறைவடைந்த உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் கட்சிகள் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர்.

அமைச்சர் ஹரக் சிங் ராவத்
ஆளும் பாஜக அரசு இதுவரை மூன்று முறை முதலமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில் ஸ்திரத்தன்மை அற்ற நிலை நீடிக்கிறது. அதேநேரம் இழந்த ஆட்சியைப் பிடிப்பதற்காக காங்கிரஸ் கட்சியும் பல்வேறு வியூகங்களை வகுத்து அதனை செயல்படுத்தி வருகிறது. உத்தரகண்ட் பாஜக தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்த ஹராக் சிங் ராவத்துக்கும், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கும் மோதல் கட்சிக்குள் ஏற்பட்டது. தன்னுடைய மருமகளுக்கு தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட ஹரக் சிங் ராவத் வாய்ப்பு கேட்டதாக தகவல் வெளியானது

பாஜகவுக்கு பின்னடைவு
முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதற்கு மறுத்துவிட்டதால் இருவருக்குமிடையே தீவிரமாக மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ராவத்தை அமைச்சரவையில் இருந்து விலகிய முதல்வர் புஷ்கர் கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கி வைப்பதாக உத்தரவிட்டார் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த செயல் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

காங்கிரஸில் இணைந்தார்
அவர் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாகவும் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் அவரை வரவேற்பதாக உத்தரகாண்ட் முன்னாள் முதல் அமைச்சர் ஹரீஷ் ராவத் கூறியிருந்தார். இந்த நிலையில் உத்தரகாண்ட் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அரசின் ராவத் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

தேர்தலில் தாக்கம்
அப்போது பேசிய அவர் பாஜக தன்னை ஆட்சி அமைப்பதற்காக பயன்படுத்திக் கொண்டு தற்போது தூக்கி எறிந்து விட்டது என தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் முக்கிய தலைவராகக் கருதப்பட்ட அரசின் ராவத் காங்கிரஸில் இணைந்துள்ளது அக்கட்சிக்கு பலத்தையும், பாஜகவுக்கு பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அவரது காங்கிரஸ் இணைவு நிச்சயம் தேர்தலின் போது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications