For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"அவங்கதான் பிரச்சனை.. இந்திய அணிக்கு பெரிய சிக்கல்".. டிராவிட் சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம்!

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று இந்தியா வெற்றிபெற்று இருந்தாலும் கூட இந்திய அணியில் சில முக்கியமான மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் கோச் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஆகியோர் இருக்கிறார்கள்.

Recommended Video

    இது தான் இப்ப சிக்கல்.. Indian Team-ல் செய்ய வேண்டிய மாற்றங்கள்

    நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி முதல் டி 20 போட்டியில் அசத்தல் ஆட்டம் ஆடி வென்றுள்ளது. இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதன்பின் 19.4 ஓவரில் இந்தியா 5 விக்கெட்டிற்கு 166 ரன்கள் எடுத்து இந்தியா வென்றது.

    எளிதாக வெற்றிபெற வேண்டிய போட்டியை கடைசி வரை இழுத்து சென்று இந்திய அணி அப்படி, இப்படி ஆடி வெற்றிபெற்றது.

    முல்லைப்பெரியாறு அணை 141 அடி - சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலையில் 806 ஏரிகள் நிரம்பின முல்லைப்பெரியாறு அணை 141 அடி - சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலையில் 806 ஏரிகள் நிரம்பின

    சவால்கள்

    சவால்கள்

    இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இருந்தாலும் 3 விஷயங்கள் இந்திய அணிக்கு எதிராக இந்த போட்டியில் இருந்தது. டிராவிட்டிற்கு ஒரு கோச்சாக இதுதான் முதல் போட்டி என்றாலும் கூட அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக இது திரும்பும் அபாயம் உள்ளது. முக்கியமாக ஐசிசி போட்டிகளில் மீண்டும் இந்தியா தோல்வி அடையாமல் இருக்க இந்த 3 சிக்கல்களை உடனே சரி செய்து ஆக வேண்டும்.

    சிக்கல் 1

    சிக்கல் 1

    இந்திய அணியில் நிறைய ஒப்பனர்கள் இருக்கிறார்கள். ராகுல், ரோஹித், ருத்து, இஷான் என்ற ஒப்பனர்கள் உள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் வரை மிடில் ஆர்டரும் வலுவாக இருக்கிறது. ஆனால் பினிஷர் இல்லை. டி 20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, பாக், நியூசிலாந்து நன்றாக ஆட அந்த அணியின் பினிஷர்களே காரணமாக இருந்தனர். ஆனால் இந்திய அணியில் பினிஷிங் ரோல் செய்ய ஆட்களே இல்லை.

    பினிஷிங்

    பினிஷிங்

    இது நேற்றும் பெரிய பிரச்சனையாக இருந்தது. கடைசி இரண்டு ஓவரில் இந்திய வீரர்கள் திணறிவிட்டனர். கடைசி 4 ஓவர்களில் பினிஷ் செய்ய ஆட்களே இல்லை. வெங்கடேஷ் ஐயர் பவுண்டரி அடித்தாலும் அவர் இன்னும் முழுமையாக நம்பிக்கை அளிக்கவில்லை. அவரை இந்திய அணி பினிஷராக களமிறக்கும் என்றால் அதற்கு என்று அவரை தயார் செய்து, முறையாக பயிற்சி வழங்க வேண்டும். தொடர்ந்து டிராவிட் அவருக்கு பினிஷிங் வாய்ப்புகளை கொடுத்து அவரை "மோல்ட்" செய்ய வேண்டும்.

    சிக்கல் 2

    சிக்கல் 2

    இந்திய அணியின் பவுலிங் நன்றாகவே இருந்தது. ஆனால் நேற்று 6வது பவுலிங் ஆப்ஷனை பயன்படுத்தவில்லை . இது தவறு. 6வது பவுலரை இப்போதே பயன்படுத்தி இந்திய அணி பழக்கப்படுத்த வேண்டும். வெங்கடேஷ் ஐயர் அணியில் எடுக்கப்பட்டதே அதனால்தான். எனவே உடனே அவருக்கு ஓவர் வழங்க வேண்டும். பாண்டியாவை அணியில் எடுத்துவிட்டு அவருக்கு ஓவர் வழங்காதது போல வெங்கடேஷ் ஐயரையும் ப்யூர் பேட்ஸ்மேனாக பயன்படுத்த கூடாது.

    சிக்கல் 3

    சிக்கல் 3

    டிராவிட் இப்போதே வெங்கடேஷ் ஐயருக்கு பவுலிங் கொடுக்க பழக்க வேண்டும். மூன்றாவது விஷயம் இந்திய அணியின் பீல்டிங். நேற்று ரோஹித் மிஸ் செய்த ரன் அவுட், அக்சர் பட்டேல் விட்ட கேட்ச், பல ரன்களை மிஸ் செய்தது என்று இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. இந்திய அணியின் பீல்டிங் கோச்சாக திலீப் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    மாற்றம் வேண்டும்

    மாற்றம் வேண்டும்

    இந்திய அணியில் மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என்றால் உடனே பீல்டிங்கில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். வீரர்களுக்கு முறையான பீல்டிங் பயிற்சி அளிக்க வேண்டும். நேற்று பீல்டிங் சரியாக இருந்து இருந்தால் ஒருவேளை நியூசிலாந்தை இந்திய அணி இதைவிட குறைவான ரன்களுக்கு சுருட்டி இருக்கும். ஆனால் பீல்டிங் மோசமானதால் இந்தியா இடையில் கொஞ்சம் ரன் கொடுத்தது. இந்த 3 விஷயங்கள்தான் பிரச்சனை என்பதால் ராகுல் டிராவிட் உடனே அதை சரி செய்ய வேண்டும்.

    English summary
    Ind vs NZ: What Rahul Dravid should change in Team India for next matches?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X