துப்பாக்கி சுடும் தூரத்தில் வீரர்கள்.. சக்தி வாய்ந்த "Militia Squad" படையை இறக்கிய சீனா.. போர் மேகம்

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக்கில் இந்தியா - சீனா ஆகிய இரண்டு நாட்டு படைகளும் மிக அருகில் குவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுடும் தூரத்தில் இரண்டு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளது.

லடாக்கில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பதற்றம் அதிகரித்து வருகிறது. ராணுவ மற்றும் ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வி அடைந்துவிட்டது. இதனால் எல்லையில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டு நாடுகளும் எல்லையில் போர் செய்வதை விரும்பவில்லை. ஆனாலும் எல்லையில் அதிக அளவில் இரண்டு நாடுகளும் படைகளை குவித்து வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

படைகள் குவிப்பு

படைகள் குவிப்பு

இந்த நிலையில் இரண்டு நாட்டு படைகளும் நேற்று மிக அருகில் குவிக்கப்பட்டது. துப்பாக்கியால் சுடும் தூரத்தில் இரண்டு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளது. ஸ்பாங்கூர் கணவாய் அருகே சீன படைகள் குவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் வீரர்கள் எல்லைக்கு கொண்டு வரப்பப்பட்டுள்ளனர். கணவாயின் இன்னொரு பக்கம் இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மிக அருகில்

மிக அருகில்

இரண்டு நாட்டு படைகளும் மிக அருகில் இருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பீரங்கிகள்,ஆயுதங்களை சீனாவின் படைகள் எல்லைக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் அங்கு ஆயுதங்களை இறக்கி உள்ளது. இந்தியாவின் நவீன பீரங்கிகள் சீன படையில் இருந்து வெறும் 500 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற பதற்றம் எழுந்துள்ளது.

சிறப்பு படை

சிறப்பு படை

லடாக்கில் தற்போது சீனா தனது ''militia squads'' எனப்படும் சிறப்பு படை பிரிவை எல்லையில் இறக்கி உள்ளது. இது சீனாவின் சிறப்பு பயிற்சி பெற்ற படைப்பிரிவு ஆகும். ராணுவ வீரர்கள் மட்டுமின்றி சிறப்பு பயிற்சி பெற்ற பல்வேறு வீரர்கள் இந்த குழுவில் இடம்பெற்று இருப்பார்கள். இந்தியா லடாக்கில் இருக்கும் முக்கியமான மலைகளை ஆக்கிரமித்துள்ளது.

மிக முக்கியம்

மிக முக்கியம்

இந்தியா இதற்காக சிறப்பு மலை பிரிவு படையை எல்லைக்கு அனுப்பி உள்ளது. லடாக்கில் பாங்காங் திசோ அருகே இருக்கும் பெரும்பாலான மலைகளை இந்தியா கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில் தற்போது சிறப்பு படை பிரிவை சீனாவும் இறக்கி உள்ளது. இந்த படையும் மலை ஏறுவதில் அதிக திறமை கொண்ட படைப்பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா நினைக்கிறது

சீனா நினைக்கிறது

லடாக்கில் மலைகளை கைப்பற்ற சீனா இவர்களை களமிறக்கி உள்ளது. இந்த குழுவில் மலை ஏறும் வீரர்கள், பாக்ஸர்கள், உள்ளூர் சண்டை குழுவில் இருக்கும் வீரர்கள், குங்பு வீரர்கள் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இந்த கலவையான குழுவைதான் எல்லையில் தற்போது சீனா களமிறக்கி உள்ளது. எல்லையில் பொதுவாக போர் வரும் போது மட்டுமே இந்த படைகளை சீனா கொண்டு வரும், தற்போது இவர்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+