மணிப்பூரில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக.. கரைந்து போன காங்கிரஸ்: இந்தியா நியூஸ் ஜன்கிபாத் சர்வே
இம்பால்: மணிப்பூரில் நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பில் மீண்டும் பாஜக வெற்றி பெறும் என இந்தியா நியூஸ் ஜன்கிபாத் கூறியுள்ளது.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. நடந்து முடிந்துள்ள தேர்தலில் மீண்டும் பாஜக தான் ஆட்சிக்கு வரும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வந்துள்ளன.
கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் என ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் இன்றோடு முடிவடைந்துள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்தியா நியூஸ் ஜன்கிபாத்
இந்தியா நியூஸ் ஜன்கிபாத் நிறுவனம் மணிப்பூர் மாநிலத்துக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பாஜக 23-28 இடங்களும், காங்கிரஸ் கட்சி 14-10 இடங்களும், தேசிய மக்கள் கட்சி 7-8 இடங்களும், நாகா கட்சி 8-5 இடங்களும், ஜேடியூ 5-7 இடங்களும், சுயேட்சைகள் 03-02 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

பாஜக
இந்தியா நியூஸ் ஜன்கிபாத் நிறுவனம் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 இடங்களில் பாஜக 23-28 இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலை பாஜக தனித்து சந்தித்தது. அதேநேரத்தில் 17 ஆயூதம் ஏந்திய இயக்கங்களின் கூட்டமைப்பான குக்கி தேசிய கூட்டமைப்பு பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது

காங்கிரஸ்
பாஜக கடந்த தேர்தலில் பாஜக 60இடங்களில் 21 இடங்கள் தான் பெற்றிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி 28 இடங்களைப் பெற்றிருந்தது. காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் என்று எண்ணிய நிலையில் நாகா, மக்கள் கட்சிகளோடு தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்து மணிப்பூரில் ஆட்சியைப் பிடித்தது பாஜக.

கூட்டணி
இந்த கருத்துக்கணிபின் படி, காங்கிரஸ் அதிகபட்சமாக 14 இடங்களைப் பிடிக்கும் என்று தெரியவருகிறது. மணிப்பூரில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, பாஜக அல்லது காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகள் உதவியுடன் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications